இறந்தவர்களின் அஸ்தி ஏன் புனித நதியில் கரைக்கப்படுகிறது தெரியுமா?
இறந்தவர்களின் அஸ்தியை சேகரித்து புனித நீரில் கரைக்கப்படுவதற்கான காரணத்தை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இறந்தவர்களின் அஸ்தி
இந்து மதத்தில், பிறப்பு முதல் இறப்பு வரை பல மரபுகள் மற்றும் பழக்க வழக்கங்கள் பின்பற்றப்படும் நிலையில், குறிப்பாக ஒருவர் இறந்த பின்பு பல சடங்குகள் செய்யப்படுகின்றது.
இந்த சடங்கானது ஒவ்வொரு இன மக்களிடையே மாறுபடுவதுடன், இதனை இறுதி சடங்காக செய்த பின்பே சடலங்கள் எரிக்கப்படுகின்றது.
அவ்வாறு இறந்தவர்களை எரித்த பின்பு அஸ்தி என்று அழைக்கப்படும் சாம்பலை சேகரித்து புனித நதிகளில் கரைப்பது வழக்கமாக இருக்கின்றது. இதில் இறந்தவர்களின் அஸ்தியை கரைக்கும் இடங்களில் ஒன்று தான் கங்கை நதியாகும்.
உண்மை என்ன?
இறந்தவர்களின் அஸ்தியை இவ்வாறு கரைப்பதற்கு கருட புராணத்தில் கூறப்பட்டுள்ளதாக போபாலைச் சேர்ந்த ஜோதிடர் ஒருவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து ஜோதிடர் கூறுகையில், 18 புராணங்களில் ஒன்றாக கருட புராணம் உள்ளது. இது பிறப்பு முதல் இறப்பு வரை பல கதைகள் மற்றும் மரபுகளைக் கொண்டுள்ளது.
இறந்தவர்களின் இறுதிச்சடங்கிற்கு பின்பு சேகரிக்கப்படும் சாம்பலை, மூன்றாவது, ஏழாவது, ஒன்பதாவது நாளில் புனித நீர் நிலைகளில் கரைக்கப்படுகின்றது.
பெரும்பாலும் 10 நாட்களுக்குள் சாம்பல் கங்கை நதியில் கரைக்கப்படும். . கங்கை தவிர, நர்மதா நதி, கோதாவரி ஆறு, கிருஷ்ணா நதி மற்றும் பிரம்மபுத்திரா போன்ற நதிகளிலும் சாம்பல் கரைக்கப்படலாம்.
நமது உடல் ஐந்து கூறுகளால் ஆனது மற்றும் தகனம் செய்த பிறகு உடல் ஐந்து உறுப்புகளில் உறிஞ்சப்படுகிறது. ஆன்மா அழியாதது என்று கீதை கூறுகிறது.
எனவே இறுதி சடங்குகளுக்குப் பிறகு சாம்பலை புனித நதிகளில் கரைப்பதன் மூலம் ஆத்மா சாந்தியடைகிறது என்பது ஐதீகம்.
இவ்வாறு செய்வதன் மூலம், இறந்தவர்கள் இவ்வுலகிலிருந்து விடுதலை பெறுவதாக கருட புராணத்தில் இருப்பதாக கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |