பல சினிமா படங்களிலும் நாம் பார்த்த ரசித்த இந்த அருவி பற்றி தெரியுமா?
ஆர்ப்பரிக்கும் அருவி, பறவைகளின் சத்தம், மண்ணின் மணம், மரங்களின் வாசம் என இயற்கையின் அழகை ரசிக்காதவர்கள் இருக்க முடியாது.
மழை மேகம் நம்மை ஈர்க்க அருவியில் குளியல் போட்டால் அவ்வளவு அற்புதம், சொல்ல வார்த்தைகளே இல்லை என்றெல்லாம் வர்ணிப்பவர்கள் ஏராளம்.
அவர்களெல்லாம் விருந்தாகிறது “ஒகேனக்கல் அருவி”. நாம் பல படங்களில் இந்த அருவியின் அழகை பார்த்து ரசித்திருப்போம், இந்த பதிவில் ஒகேனக்கல் அருவி பற்றி மேலும் தெரிந்து கொள்ளலாம்.
எங்கு அமைந்திருக்கிறது?
இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் காவிரி ஆற்றில் அமைந்துள்ளது. இது தருமபுரியில் இருந்து 46 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
கடல் மட்டத்தில் இருந்து 1500 அடி உயரத்தில் உள்ளது, ஒகேனக்கல்லில் உள்ளது ஒற்றை அருவி அல்ல, பல அருவிகளின் தொகுப்பாகும்.
பெயர் காரணம்
தலைநீர் என்பது இந்த நீர்வீழ்ச்சியைக் குறிக்கும் சங்ககால வழக்கு. இதனைச் சூழ்ந்திருந்த நாடு தலைநீர் நாடு எனப்பட்டது.
தகடூர் என்னும் தருமபுரியைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட அதியமான் நெடுமான் அஞ்சி இதன் சங்ககால அரசன்.
ஒகேனக்கலின் பழைய பெயர் உகுநீர்க்கல் என்பதாகும். உகுநீர்க்கல் என்ற தமிழ்ச் சொல்லே மருவி 'ஒகேனக்கல்' என்றானது.
ஹொகேனேகல் என்ற கன்னட சொல்லுக்கு புகையும் கல்பாறை என்று பொருள் என்பர்.
பரிசல் சவாரி
பருவகாலங்களில் சுற்றுலாவுக்கு ஏற்ற இடம் ஒகேனக்கல் அருவி, வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அளவு இயற்கை எழில் கொஞ்சும் அழகுடன் ஆர்ப்பரிக்கும் இந்த அருவில் பரிசல் சவாரி மேற்கொள்ளலாம், பாறையின் நீர்ப்பரப்பில் எண்ணற்ற நீரோடைகள் பாய்ந்து செல்வதால் புகை பாறைகள் என்ற பெயரும் இதற்குண்டு.
ஆயில் மசாஜ்
குளிப்பதற்கு முன்னர் ஆயில் மசாஜ் செய்து கொள்ளலாம், சுகமான ஆயில் மசாஜ் செய்து விட்டு
அருவியில் குளியலுடன் கரையோரம் ஆற்று மீன்களை ருசித்து சாப்பிடுவதே அலாதி சுகம் தானே!
பெண்கள் குளிப்பதற்கு தனி இடவசதியும் உண்டு, அங்கிருந்து ஆற்றின் மறுகரைக்கு சென்றுவர தொங்குபாலம் இருப்பதால் இயற்கையின் அழகை மேலும் ரசிக்கலாம்!!!
Elamaean Elaa Photography