முட்டையால் வடிவமைக்கப்படும் சுவர்.. பிரமிக்க வைக்கும் கட்டிடக்கலை- செட்டிநாடு சிறப்பு

India
By Dhushi Dec 13, 2024 07:54 AM GMT
Report

சுண்ணாம்புக்கலவை, கருப்பட்டி, சுடுக்காய்களை செக்கில் அரைத்து முட்டை வெள்ளைக்கரு கலந்த கலவையை கொண்டு செட்டிநாடு வீடுகளின் சுவர் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

தமிழகத்தின் பாரம்பரியக் கட்டிடக் கலையை பறைசாற்றும் செட்டிநாடு வீடுகள் பல தலைமுறைகளைக் கடந்து நிற்கிறது.

பாரம்பரியம் மாறாத கட்டிடக்கலைக்கு முன்னோடியாக இருக்கும் சிவகங்கை மாவட்டத்தில் கம்பீரமும், கலை நயமும் கொண்ட மாளிகைகள் அதிகம் உள்ளன.

சர்வதேச தரத்தில் ஆயிரக்கணக்கான பழமை மாறாத வீடுகள் இன்றும் சுற்றுலா பயணிகளின் கண்களை அலங்கரிக்கின்றன.

முட்டையால் வடிவமைக்கப்படும் சுவர்.. பிரமிக்க வைக்கும் கட்டிடக்கலை- செட்டிநாடு சிறப்பு | History Heritage Of Chettinad Houses

இது தொடர்பான மேலதிக தகவல்களை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.    

கட்டிடக் கலை

சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி பகுதியில் உள்ள நகரத்தார் சமூகத்தினர் வசிக்கின்ற சுமாரான 96 ஊர்களையும் செட்டுநாடு என அழைக்கிறார்கள். சிறிய அரண்மனை 40 அடி அகலம், 120 அடி நீளத்திலும், மிகப்பெரிய அரண்மனை 60 அடி அகலம், 200 அடி நீள இடத்தில் கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த மாளிகைகள் அலங்கார விளக்குகள், தேக்கு மரச்சாமான்கள், பளிங்குக்கல், கண்ணாடிகள், கம்பளங்கள் மற்றும் படிகங்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

முட்டையால் வடிவமைக்கப்படும் சுவர்.. பிரமிக்க வைக்கும் கட்டிடக்கலை- செட்டிநாடு சிறப்பு | History Heritage Of Chettinad Houses

செட்டிநாடு வீடுகளின் கட்டிடக் கலை உலகப் புகழ்பெற்றவையாக பார்க்கப்படுகின்றது. இந்த வீடுகளில் முப்பது அறைகள் வரை இருக்கும் எனவும் கூறப்படுகின்றது. 

ஆயிரம் ஜன்னல் வீடு

சுண்ணாம்புக்கலவை, கருப்பட்டி, சுடுக்காய்களை செக்கில் அரைத்து முட்டை வெள்ளைக்கரு கலந்த கலவையை பயன்படுத்தி சுவர்கள் கட்டியுள்ளனர்.

தேக்குமரத்தால் செய்யப்பட்ட பெரிய பெரிய கதவுகள், மர பீரோக்கள், பிரமாண்டமான இரும்புப் பெட்டகங்கள், நாற்காலிகள், ஊஞ்சல் என மரவேலைப்பாடு நிறைந்த பொருள்கள் ஆகிய இந்த வீடுகளுக்கு அழகு சேர்க்கின்றன.

முட்டையால் வடிவமைக்கப்படும் சுவர்.. பிரமிக்க வைக்கும் கட்டிடக்கலை- செட்டிநாடு சிறப்பு | History Heritage Of Chettinad Houses

ஆயிரம் ஜன்னல்கள் கொண்ட வீடுகளும் இங்கு உள்ளதாக கூறப்படுபடுகின்றது. ஒரு அறை முழுவதும் கண்ணாடிகளால் பதிக்கப்பட்ட வீடுகளும் அப்பகுதியில் உள்ளன.            

கலைநயம் மிக்க வீடுகள்

சினிமாவில் ஒரு சில பிரமாண்டமான வீடுகளை பார்த்திருப்போம். அந்த வீட்டில் பாட்டி, தாத்தா,பெரியம்மா, பெரியப்பா, அத்தை, மாமா எனக் கூட்டு குடும்பமாக வாழ்வதை காட்டியிருப்பார்கள்.

இப்படி சினிமாவில் குடும்பக்கதைகளுக்கு பயன்படுத்தப்படும் வீடுகள் காரைக்குடி செட்டியார்களின் கலையம்சத்துடன் கட்டப்படும் வீடுகள் தான்.

முட்டையால் வடிவமைக்கப்படும் சுவர்.. பிரமிக்க வைக்கும் கட்டிடக்கலை- செட்டிநாடு சிறப்பு | History Heritage Of Chettinad Houses

இந்த வீடுகளுக்கு பச்சை, மஞ்சள், சிவப்பு போன்ற வர்ணங்களில் நிறமூட்டப்பட்டிருக்கும்.  

ஆத்தங்குடி டைல்கள்

செட்டிநாடு வீடுகள் பெரும்பாலும் தரைமட்டத்தில் இருந்து ஐந்து அடிக்கும் மேல் உயரத்தில் தான் கட்டப்பட்டிருக்கும். இந்த வீடுகள் முழுவதும் பர்மா தேக்கு, மாடங்கள், அறைகள், தூண்கள், ஜன்னல்கள், கதவுகள் என அனைத்தும் கலைநயத்துடன் அமைத்திருப்பார்கள்.

செட்டிநாட்டு வீடுகள் ஆத்தங்குடி டைல்களில் கட்டப்பட்டிருக்கும். தற்போது பெரும்பாலான வீடுகள் இந்த டைல்களில் தான் கட்டப்படுகின்றன. இதில் வரும் கண்ணாடிகளை இயற்கை வண்ணங்களை பயன்படுத்தியிருப்பார்கள்.  

முட்டையால் வடிவமைக்கப்படும் சுவர்.. பிரமிக்க வைக்கும் கட்டிடக்கலை- செட்டிநாடு சிறப்பு | History Heritage Of Chettinad Houses

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 



மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US