செடிகளுடன் கூடிய கண்ணாடி மாஸ்க்கோடு வீதியில் உலாவும் நபர்! வாயடைத்து போன பார்வையாளர்கள்.... என்ன காரணம் தெரியுமா?
பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் கண்ணாடிக் குடுவைக்குள் சிறு சிறு நறுமண செடிகளை வளர்த்து அதனை மாஸ்க்காக அணிந்து கொண்டு வீதியில் உலாவும் வீடியோ இணையவாசிகள் இடையே பாராட்டு பெற்று வருகின்றது.
இது குறித்து அவர் தெரிவிக்கையில், நான் மிகவும் நறுமணமாக உணர்கின்றேன்.
This man is wearing a ‘portable oasis’ around his head instead of a face mask ? pic.twitter.com/QhKv96VvyW
— NowThis (@nowthisnews) April 27, 2021
இந்த கூண்டில் உள்ளது நறுமணச் செடிகள். நான் சுவாசிக்க இவை நன்றாக உதவுகின்றது. எனக்கு ஆஸ்துமா உள்ளது. இவ்விதம் சுவாசிப்பது கூட எனக்கு வசதியாக உள்ளது.
காற்று மற்றும் ஒலி மாசுபாட்டிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய தேவையைக் குறைப்பதாகவும் கூறியுள்ளார். அந்நாட்டில் கொரோனா காரணமாக கடைகள் மூடப்பட்டுளள்து.
எனினும் ஏதேனும் தேவைக்காக வீதியில் நடக்கும் போது பலரும் தன்னை கவனிப்பதாகவும், தனிமையில் இருப்பதாக உணர்வதாகவும் அது இந்த கொரோனா காலத்தில் பிறர் தன்னிடம் வந்து பேசுவதை குறைப்பதாகவும் கூறியுள்ளார்.
'இது ஒரு கிரீன்ஹவுஸ்? இது தேனீக்களுக்கானதா? இது தாவரங்களுக்கானதா? என்று எங்களுக்குத் தெரியாது, ஆனால் இது ஒரு நல்ல யோசனை என்று அந்நாட்டை சேர்ந்த நகைக்கடை விற்பனையாளர் சார்லி எல்கிஸ் ராய்ட்டர்ஸிடம் கூறியுள்ளார்.