அட்சதை தூவி வாழ்த்து சொல்வதற்குப் பின்னால் இருக்கும் ரகசியம் என்ன தெரியுமா?
பொதுவாகவே இந்து மதத்தவர்கள் எந்த வேலை எடுத்தாலும், அதில் பல சாஸ்திர சம்பிரதாயங்களை கொண்டுதான் ஒவ்வொரு நிகழ்வையும் வழிநடத்தி வருவார்கள்.
அப்படி முன்னோர்கள் வழியில் காலம் காலமாக வந்தது தான் ஒருவருக்கும் நடக்கும் சுப நிகழ்வுகளின் போது வாழ்த்து சொல்வதற்காக அட்சதை இட்டு வாழ்த்துவது.
வீடுகளில் நடக்கும் நுப நிகழ்வுகளில் எல்லாம் ஏலக்காய், கிராம்பு, சாதிக்காய், கற்பூரம் எனும் நறுமணப் பொருட்களுடன், வெற்றிலை, சந்தனம், மஞ்சள், உளுந்து, நெல், உப்பு, மலர் ஆகிய மங்கலப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இதில் அரிசிக்கும் மஞ்சளுக்கும் முதல் இடம் உண்டு. இவை இரண்டையும் கலந்ததுதான் அட்சதை செய்கிறார்கள். இந்த அட்சதையை பெரும்பாலும் ஒருவரை வாழ்த்துவதற்கு பயன்படுத்துகின்றது.
எம்மில் பலருக்கு எதற்காக இப்படி அட்சதை போட்டு வாழ்த்து சொல்கிறார்கள் என்று தெரிந்திருக்காது. ஆனால் நமக்கு தெரியாத அளவிற்கு இதில் பல அர்த்தங்களும் ஆன்மீகமும் இருக்கிறது.
இவ்வாறு அட்சதை போடுவது எதற்காக என கீழுள்ள காணொளியில் தெளிவாக தெரிந்துக் கொள்ளலாம்.