நீரிழிவு நோயின் அதிகரிப்பை கண்டுபிடிக்கணுமா? கை கால்களில் இந்த அறிகுறிகள் தோன்றும்
நீரிழிவு நோய் ஒரு அமைதியான கொலையாளி என்று அழைக்கப்படுகிறது. நீரிழிவு நோய் என்பது ஒரு வகையான வளர்சிதை மாற்றக் கோளாறு ஆகும், இதில் உடல் போதுமான இன்சுலினை உற்பத்தி செய்யாது அல்லது அதை முறையாகப் பயன்படுத்துவதில் சிரமத்தை ஏற்படுத்துகிறது.
இதன் காரணமாக உடலில் இன்சுலின் பற்றாக்குறையால், சர்க்கரை அளவு அதிகரிக்கத் தொடங்குகிறது. இது சிறுநீரகங்கள், தோல், இதயம், கண்கள் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது.
உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது இத கை கால்களில் சில அறிகுறிகளை காட்டும். இது தொடர்பில் இங்கு முழுமையாக பார்க்கலாம்.
நீரிழிவு நோயின் அறிகுறிகள்
உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது கை, கால்கள் மரத்துப் போதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். எந்த காரணமும் இல்லாமல் பாதங்கள் மற்றும் கால்களில் உணர்வின்மை அல்லது உணர்வு இழப்பு போன்றவை ஏற்பட்டால் இது நரம்பு சேதமடைந்ததற்கான அறிகுறியாகும்.
இது நீரிழிவு நோயின் அதிகரிப்பால் நிகழும். உங்கள் கால்களிலோ அல்லது கைகளிலோ திடீரென்று கூச்ச தொடங்கினால் அது நீண்ட காலமாக அதிக அளவு இரத்த சர்க்கரை நரம்புகளைப் பாதித்து இருக்கின்றது என அர்த்தம்.
இது மூளைக்கு சமிக்ஞை ஓட்டத்தை நிறுத்துகிறது. சக்கரை நோய் அதிகரித்தால் நரம்புகளுக்கு ஏற்படும் சேதம் திடீர் தசைப்பிடிப்பு அல்லது கால் பிடிப்புகளை ஏற்படுத்துகிறது. இது இரவில் அதிகமாக இருக்கலாம்.
ஆனால் இது நபருக்கு நபர் மாறுபடும். சிலர் கடுமையான வலியையும் அனுபவிக்க நேரிடும். நீரிழிவு நோயால் ஏற்படும் பாதப் பிரச்சினைகள் பொதுவானவை. இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும்போது அது புற நரம்புகளை சேதப்படுத்துகிறது.
இதன் விளைவாக உணர்வு இழப்பு, உணர்வின்மை மற்றும் கூச்ச உணர்வு ஏற்படுகிறது. சிகிச்சையைத் தடுக்கும் வகையில் இரத்த ஓட்டம் குறைகிறது. எனவே, சிறிய வெட்டுக்கள், சிவத்தல், சரியாகப் பொருந்தாத காலணிகளால் ஏற்படும் வெட்டுக்கள் ஆபத்தான புண்களாக மாறும். இதில் கவனதாக இருப்பது நல்லது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
