வாட்ஸ்அப் சாட்களை இரகசியமாக ஒளித்து வைக்க சூப்பரான ரிக்ஸ்! மாயமாக்கும் செயலி
வாட்ஸ்அப் மெசேஜ்களை எமது கண்ணிற்கு மாத்திரம் தெரியும் படி மாற்றிக் கொள்ள புதிய அப்பேட் செய்யப்பட்டுள்ளது.
சாட்களை மறைத்து வைக்க முடியுமா?
அலுவலகத்தில் வேலை செய்யும் பயனர்கள் மற்றும் பொது இடங்களில் வாட்ஸ்அப் பயன்படுத்தும் பயனர்கள் போன்றவருக்கு இது உதவியாக இருக்கும்.
மேலும் வாட்ஸ்அப்புக்கும் உரிய அலைபேசிக்கும் சொந்தகாரர் மாத்திரமே இதை செயற்படுத்த முடியும். அந்தளவிற்கு பிரைவசி செட்டிங் செய்யப்பட்டுள்ளது.
இதனை எப்படி ஆக்டிவ் செய்வது குறித்து சந்தேக இருக்கும்? இதற்கு வாட்ஸ்அப் சார்ந்த ஒரு ஆப்பை பதிவிறக்கம் செய்ய வேண்டுமா? இது போன்ற பல கேள்விகளுக்கு இங்கு பதிலை பெறலாம்.
செயலியின் செயற்பாடுகள்
இந்த செயலி வாட்ஸ்அப்களிலிருக்கும் மெசேஜ்கள் மற்றும் சாட்களை "ப்ளர் (blur)" செய்துவிடுகிறது. உதாரணமாக, சாட்களிலிருக்கும் எழுத்துக்களை நாம் பார்க்க முடியாமல் மங்கலடைய வைக்கிறது.
நாம் விரும்பும் சாட்களிலிருக்கும் உங்கள் கர்ஸரை (Cursor) வைத்தால் மாத்திரமே மெசேஜ் பார்க்க முடியும்.
உங்களுடைய கர்ஸரை மெசேஜ் மீது வைக்காத போது உங்களுடைய வாட்ஸ்அப் சாட் அனைத்தும் ப்ளர் நிலையில் இருக்கும்.
இந்த வசதி அலுவலகங்களில் வேலை செய்யும் பயனர்களுக்காகவே உருவாக்கப்பட்டது. உதாரணமாக, லேப்டாப் அல்லது டெஸ்க்டாப்களில் வாட்ஸ்அப் பயன்படுத்தும் பயனர்களை குறிப்பிடலாம்.
செயன்முறையை செயற்படுத்தும் வழிமுறைகள்
முதலில் குரோம் எக்ஸ்டென்ஷன் டவுன்லோட் செய்ய வேண்டும்.
Open chrome > search bar > Privacy Extension For WhatsApp Web> Down load
இந்த ஆப்பை பதிவிறக்கம் செய்த பின்னர் போனிலிருக்கும் வாட்ஸ்அப் சுயமாகவே மங்கலடைந்து விடும் சாட்களின் பெயர் மாத்திரம் கண்களுக்கு காட்சி தரும்.
மேலும் தனிப்பட்ட சாட்களை ஓபன் செய்தாலும் இது போலவே காட்சியளிக்கும். இதனை தெளிவான முறைக்கு கொண்டு வர, Mouse pointerல் கர்ஸரை வைக்க வேண்டும்.
இவ்வாறு நீங்கள் செய்யும் போது உங்களது சாட்கள் அனைத்து தெளிவாக காண்பிக்கப்படும்.
மேலும் இந்த ஆப் உங்கள் போன்களில் இருந்தால் மற்றைய டெக்ஸ்ட் சாட்களும் மங்கல் நிலையிலே காணப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.