கண்ணாமூச்சி விளையாடிய சிறுவன்! 6 நாட்கள் பயணித்து மலேசியா சென்ற சோகம்
வங்க தேச நாட்டைச் சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவன் கண்ணாமூச்சி விளையாடிய போது ஏற்பட்ட விபரீதத்தால் வேறு நாட்டுக்கு சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கண்ணாமூச்சி விளையாடிய சிறுவன்
வங்க தேச நாட்டைச் சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவன் கண்ணாமூச்சி விளையாடிய போது, கண்டெய்னருக்குள் சென்று மறைந்திருக்கின்றான்.
குறித்த கண்டெய்னர் மலேசியாவிற்கு செல்லும் கண்டெய்னர் ஆகும். சிறுவனும் உள்ளே சென்ற சிறிது நேரத்திற்குள் தூங்கியுள்ளான். பின்பு கண்விழித்துப் பார்த்த போது தான் எங்கே இருக்கிறோம் என்பதை தெரியாமல் இருந்துள்ளான்.
கப்பல் மலேசியாவை சென்றடைந்து அதிகாரிகள் கண்டெய்னரை திறந்தபோது, சிறுவனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். சுமார் 2300 கிமீட்டர், 6 நாட்கள் பயணித்ததால் உடல் நலம் பாதிக்கபட்ட சிறுவனை அதிகாரிகள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ள நிலையில், இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.