செலவே இல்லாமல் முகத்தை பொலிவாக்க வேண்டுமா? இந்த பூ போதும்
முகத்தை பொலிவாக்க இயற்கையில் காணப்படும் ஒரு பூ மட்டுமே போதும். அதை எப்படி பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம்.
முகத்தை பொலிவாக்கும் பூ
பெண்கள் தங்களது முகத்தை எப்போதும் பொலிவுடனும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க வேண்டும் என நினைப்பார்கள். அதிலும் ஏதாவது விசேட தினங்கள் என்றால் முகம் இன்னும் கொஞ்சம் பொலிவாக இருக்க வேண்டும் என்று தான் நினைப்போம்.
அப்படி முகம் பொலிவாக இருக்க பல விலையுயர்ந்த பொருட்களை வாங்கி பயன்படுத்துகிறோம். அப்படி இல்லை என்றால் அழகுகலை நிலையங்களுக்கு சென்று அங்கே விலை கொடுத்து முகத்தை அழகபடுத்துகிறோம்.
இனி அப்படி எல்லாம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. செலவில்லாமல் முகத்தை பொலிவாக்க செவ்வரத்தம் பூ இருந்தால் போதும்.

செம்பருத்தி
அனைவரது வீடுகளிலும் எளிதில் கிடைக்கும் பூக்களில் ஒன்றாக உள்ள செம்பருத்தி. இதைத் தினமும் சாப்பிடும் போது இதயம் சம்பந்தப்பட்ட பல பிரச்சனைகளுக்குத் தீர்வு தரும்.
இது ஆரோக்கியம் தருவது மட்டுமல்லாமல் முகத்தை அழகாக பராமரிக்கவும் செம்பருத்தி உதவும். செம்பருத்தியில் உள்ள வைட்டமின் சி, ஏஎச்ஏ போன்ற ஆக்ஸிஜனேற்றிகள் சருமத்தில் உள்ள சுருக்கங்களைக் குறைத்து முகத்தை எப்போதும் பிரகாசமாக வைத்திருக்க உதவுகிறது.
இதற்கு முகத்தை எப்போதும் பொலிவுடன் வைத்திருக்க செம்பருத்தி பேஸ் பேக்குகளைத் தயாரித்து உபயோகிக்கலாம். இதற்கு முதலில் செம்பருத்தி இலை மற்றும் பூக்களை நிழலில் காய வைக்கவும்.

பின்னர் இதை பொடியாக்கிக் கொள்ளவும். இதனுடன் 1 டீஸ்பூன் முல்தானி மெட்டி மற்றும் தயிர் போன்றவற்றைச் சேர்த்து ஒரு கலவையாக தயாரித்து கொள்ளவும்.
இதை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவி 20 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விடவும். பின்னர் குளிர்ந்த நீரைக் கொண்டு முகத்தைக் கழுவினால் முகம் இயற்கையான பொலிவை தரும்.

செம்பருத்தியை பேஸ் பேக்காக மட்டுமின்றி ஸ்கரப் போன்று பயன்படுத்தலாம். ஒரு சிறிய பவுலில் செம்பருத்தி பூவின் பொடி, சிறிதளவு சர்க்கரை, கடலை மாவு மற்றும் பால் சேர்த்து ஸ்கரப் தயார் செய்துக் கொள்ளவும்.
வழக்கம் போன்று பயன்படுத்தும் ஸ்கரப் போன்று முகத்தில் மென்மையாக தேய்த்து எடுத்தால் போதும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கிவிடும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |