ஆபத்தான குடல் இறக்கமா? உடனே சிகிச்கை செய்யுங்க! ஹெர்னியா எதனால்? ஏன்? யாருக்கு?
குடலிறக்கம் என்பது ஒரு உறுப்பு அல்லது திசுவினால் உருவாக்கப்படும் ஒரு புடைப்பு.
புடைப்பானது பொதுவாக அது இருக்கும் உடல்ப்பாகத்தின் பலவீனமான பகுதியினூடாகத் தள்ளுகிறது.
மிகவும் பொதுவாக, குடலிறக்கம் ஏற்படும் பகுதி வயிறு ஆகும். இதனை தான் ஹெர்னியா என்று அழைக்கின்றனர்.
ஹெர்னியா என்பது குடலில் உண்டாகும் ஒரு வகை சிக்கலாகும். குடலிறக்கம் காரணமாக, வயிற்றில் துளைகள் ஏற்படுகின்றது மற்றும் அவை வீங்கிய வடிவத்தில் வெளியே தெரிகின்றன.
இதனால் இடுப்பின் தசைகள் பலவீனமடைகின்றன.
ஹெர்னியா நோய் ஆண்கள், பெண்கள் என இருபாலினரிடத்திலும் காணப்படுகிறது.
குடலிறக்க வகைகள்
இங்குவினல் ஹெர்னியா - ஆண்களுக்கே இந்த வித ஹெர்னியா அதிகமாக ஏற்படுகிறது.
ஆண் குழந்தை பிறப்பதற்கு சற்று முன்பு தான் அதன் விரைப்பைகள் அடிவயிற்றுப் பகுதியில் இருந்து கவட்டைக்கால் என்று சொல்லப்படும் பகுதி வழியாக கீழே இறங்கும்.
இந்த கவட்டைகால் பகுதி பொதுவாக மூன்று அல்லது ஆறு மாதங்களில் இயல்பாகவே மூடிக்கொள்ளும்.
ஆனால் சில சமயங்களில் இந்த பகுதி மூடாமல் இருப்பதால் தான் பின்னாளில் இதுவே குடலிறக்கம் ஏற்படக் காரணமாக அமைந்துவிடுகிறது.
ஹையாடல் ஹெர்னியா - இது திரைத்தசை அல்லது ஆஸ்போகஸ் உணவு வால்வு என்று சொல்லப்படும்.
நெஞ்சையும் வயிற்றையும் பிரிக்கும் வலுவான தசைப்பகுதியில் ஏற்படும் பலவீனத்தால் ஏற்படுகிறது. இந்த குடலிறக்கத்தால் சில சமயங்களில் நெஞ்செரிச்சல் ஏற்படும். 50 வயதை அடைந்தவர்களுக்கு இந்த குடலிறக்கம் சாதாரணமாக காணப்படுகிறது.
தொடை பகுதியில் ஏற்படும் குடலிறக்கம் - இந்த வகை குடலிறக்கம் பெண்களுக்கு பொதுவாக ஏற்படுகிறது.
இந்த ஹெர்னியாவில் "கவட்டை" என்று சொல்லப்படும் "groin"என்ற குடல் திசுக்களின் பலவீனமான பகுதி தொடை எலும்புக் கால்வாய் பகுதிக்குள் குடலிறக்கம் ஏற்படும். இது பொதுவாக கருவுற்ற பெண்களுக்கு, உடல் பருமன் உள்ள பெண்களுக்கு ஏற்படும்.
தொப்புள் பகுதியில் ஏற்படும் குடலிறக்கம் - அம்பிளக்கள் ஹெர்னியா குடலிறக்கம் தொப்புள் பகுதியில் ஏற்படுகிறது. தொப்புள் பகுதியானது வயிற்றுப்பகுதியில் இயல்பாகவே பலவீனமான தசைகளைக் கொண்டு இருக்கும்.
தொப்புள்கொடி அறுக்கப்பட்டவுடன் அது மூடுவதற்கு முன்பாக சில காலங்களுக்கு இந்த வகை ஹெர்னியா இயல்பாகவே குழந்தைகளுக்கு இருக்கும்.
அது தானாகவே சில மாதங்களில் மறந்துவிடும்.சிறு குடல் ஒரு பகுதியாக வயிற்று தசைகளை தள்ளும் போது தொப்புள் பகுதிகளில் வீக்கம் ஏற்படுகிறது. இது தான் அம்பிளக்கள் ஹெர்னியா.
ஹெர்னியா ஏற்படக் காரணங்கள்
- திசுச் சிதைவு மற்றும் பழுது தூக்குதல்
- காயம் காரணமாக திசுக்களில் ஏற்படும் கிழிஞ்சல்கள்
- உள் உறுப்புகள் எளிதாக புடைப்பதற்கு திசுச் சிதைவு வழிவகுக்கிறது
- வயதாகுதல்
- அழுத்தத்துடன் தொடர்ந்து இருமல் போன்றவை
- அறுவை சிகிச்சைக்கு பிறகு வயிற்று தசைகள் வீக்கமடைதல்
- அதிகமாக எடை தூக்குவது
- மலச்சிக்கல்
- அடிவயிற்றில் இருக்கும் நீர் பிறப்பு குறைபாடுகள் போன்றவை குடலிறக்கத்தை ஏற்படுத்துகிறது.
அறிகுறிகள்
- பாதிக்கப்பட்ட பகுதிகளில் வீக்கம் காணப்படுதல்
- பாதிக்கப்பட்ட பகுதிகளில் வலி
- அசெளகரியம்
- பலவீனம்
- சோர்வு
- வலியை உணரும் உணர்வு
- மார்பு வலி
- உணவை விழுங்குவதில் சிரமம்
- நெஞ்செரிச்சல் போன்றவை ஏற்படும்.
- பரம்பரை ரீதியாக வருதல்
- அதிக உடல் பருமன்
- நாட்பட்ட மலச்சிக்கல்
- சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸ் போன்றவை குடலிறக்கத்தை மேலும் அபாயமாக்கு கின்றன.
சிகிச்சை
குடலிறக்கம் உறுதியானால் அவை 2 ஆண்டுகளுக்கும் 40 % குடலை பாதிக்கிறது. ஹெர்னியாவுக்கு சிகிச்சை என்றால் அது அறுவை சிகிச்சை மட்டும் தான்.
அறுவை சிகிச்சையின் மூலம் புடைத்து வெளியே வரும் பகுதியை உள்ளே தள்ளுவது அல்லது அதை மொத்தமாக நீக்கிவிட்டு தையல் மூலம் மூடுவது. இந்த அறுவை சிகிச்சையும் இரண்டு விதங்களில் உண்டாகிறது.
ஒன்று திறந்த வெளி மற்றொன்று துளைகள் வழியாக அறுவை சிகிச்சை செய்வது.
முதல் வகையான அறுவை சிகிச்சை முன்பு நோயாளிகளுக்கு அசெளகரியத்தை உண்டாக்கினாலும் தற்போதுள்ள நவீன மருத்துவத்தில் இவை அந்த வலியியை உண்டாக்குவதில்லை.
இதில் இரண்டாவது வகையான லேப்ராஸ்கோப்பி முறை எளிதானது. வலியும் தழும்பும் குறைவாக இருக்கும்.
மேலும் இந்த முறையில் தொற்று உண்டாகும் வாய்ப்பு குறைவு. வேகமாக குணமடைந்து இயல்பு நிலைக்கும் திரும்பமுடியும்.
