கெட்ட கொழுப்பை கரைக்கும் மூலிகை தேனீர் - 3 வாரம் குடிங்க யானை பலம் கிடைக்கும்
வாழ்க்கை முறை மாற்றங்கள், கொழுப்பு மருந்துகள் மற்றும் உடற்பயிற்சி அனைத்தும் ஆரோக்கியமான கொழுப்பின் அளவைப் பராமரிக்கவும் இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கவும் அவசியம்.
இருந்தும் இதை எல்லாம் யாராவது இப்போ பின்பற்றுகிறார்களா? இல்லை என்று தான் சொல்ல முடியும். இப்போது இருக்கும் மக்களுக்கு சிரமம் இல்லாமல் வேலை செய்து பழகி விட்டதால் உணவுமுறையும் மிகவும் மோசமாக இருக்கிறது.
பழக்க வழக்கம் அதை விட மோசம். இந்த நிலையினால் தற்போது கெட்ட கொழுப்பின் சதவீதமும் அதிகரித்துள்ளது. இதை கஷ்டப்பட்டு குறைக்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லை.
இதற்காக நாம் பழக்க வழக்கத்தில் ஒரு சின்ன மாற்றம் செய்தால் போதும். அதற்காக தான் பதிவில் கெட்ட கொடுப்பை கரைகக கூடிய மூலிகை தேனீர்என்ன அவை எப்படி உடலில் செயல்படும் என்பதை பார்க்க போகிறோம்.

| இஞ்சி தேநீர் | இஞ்சி ஒரு சக்திவாய்ந்த மூலிகை. ஆனால் இதன் அருமை யாருக்கும் தெரிவதில்லை. இஞ்சிரோல்கள் போன்ற உயிரியல் ரீதியாக செயல்படும் சேர்மங்கள் இஞ்சியில் நிறையவே இருக்கிறது. அவை அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளன. இஞ்சி தேநீர் கெட்ட கொழுப்பிற்கு எதிரான ஒரு சிறந்த தேனீர் என்று சொல்ல முடியாது. ஆனால் செட்ட கொழுப்பு மூலம் அபாயத்தை இது குறைக்கும். இஞ்சி வீக்கத்தைக் குறைக்கவும், ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்கவும், உடலில் இன்சுலின் எதிர்ப்பை அதிகரிக்கவும் எதவி செய்யும்.  | 
| பச்சை தேயிலை | கிரீன் டீக்கு என்று சொன்னால் உங்களுக்கே தெரியும் அதில் ஏராளமான நன்மை இருக்கின்றது என்று. இதில் உடலில் எல்டிஎல் அளவைக் குறைக்க உதவும் கேட்டசின்கள் போன்ற ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்ததாக ஆராய்ச்சி ரீதியாக கூறப்பட்டுள்ளது. இது இரத்த அழுத்தத்தையும் இதயம் தொடர்பான நோய்களையும் குறைக்கிறது உன்பத உறுதிப்படுத்தபட்டுள்ளது. ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று கப் மட்டும்குடித்தால் இதய ஆரோக்கியத்தை ஆதரிப்பது மட்டுமல்லாமல், வீக்கத்தைக் குறைப்பதன் மூலம் எடை இழப்பிற்கும் உதவும்.  | 
| செம்பருத்தி தேநீர் | கண்ணை கவரும் சிவப்பு நிறத்தில் இருக்கும் இந்த தேனீரை யாரும் விரும்பாமல் இருக்க மாட்டார்கள். இந்த செம்பருத்தி தேனீரில் இதயத்தின் நன்மை நிறைய உள்ளன. இது இயற்கையாகவே இதய ஆரோக்கியத்தை ஆதரிப்பதற்கான ஒரு சிறந்த தேனீர் என கூறப்படுகின்றது. அறிவியல் படி லேசான உயர் இரத்த அழுத்தம் உள்ள 65 நோயாளிகள் 6 வாரங்களுக்கு தினமும் 3 கப் செம்பருத்தி தேநீர் குடிக்கச் வைத்த சமயத்தில் 6 வாரங்களுக்குப் பிறகு அவர்களுக்கு 6 வாரங்களில் நல்ல நன்மை கிடைத்துள்ளத. இதன் மூலம் அந்த நபர்களுக்கு கெட்ட கொழுப்பின் அளவு குறைந்து இதய ஆரோக்கியம் நன்றாகவே மேம்பட்டுள்ளது.  | 
| ரூயிபோஸ் தேநீர் | ரூயிபோஸ் அல்லது ரெட் புஷ் டீ, அதிக கொழுப்பு பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இயற்கையான, காஃபின் இல்லாத மற்றும் ஆக்ஸிஜனேற்றம் நிறைந்த ஒரு தேனீராகும். இதில் அஸ்பலத்தின் மற்றும் நோத்தோஃபாகின் ஆகிய இரண்டு மாயாஜால சேர்மங்களின் இருக்கின்றது. இதன் மூலம் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்கவும், கொழுப்பைக் குறைக்கவும், ஒட்டுமொத்த இருதய செயல்பாட்டை ஆதரிக்கவும் உதவுகிறது. ஆப்பிரிக்காவில் பொது சுகாதார இதழில் (JPHIA ) வெளியிடப்பட்ட ஆராய்ச்சியின் படி ஒரு நாளைக்கு 200 மில்லி முதல் 1200 மில்லி வரையிலான அளவு ஆய்வுகள், ரூயிபோஸ் தேநீர் குடித்த்தால் இரத்த குளுக்கோஸ் அளவைக் குறைக்கும் மற்றும் உடலில் ஆக்ஸிஜனேற்ற நிலையைக் குறைக்கும்.  | 
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |