நார்ச்சத்து அதிகம் கொண்ட இந்த பழங்களை தவறாமல் சாப்பிடுங்க... வயிறு பிரச்சனையே இருக்காது
நார்ச்சத்து என்பது நமது கொழுப்பைக் குறைக்க உதவும் முக்கியமான ஊட்டச்சத்து ஆகும். மேலும் இரத்த சர்க்கரை அளவை சமப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது.
நார்ச்சத்து நிறைந்த பழங்களை நாம் உட்கொள்வதால் நமது செரிமான மண்டலம் வலுப்படுகின்றது. அந்த வகையில் நார்ச்சத்து அதிகமுள்ள பழங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளவும்.
நார்ச்சத்து கொண்ட பழங்கள்
கொய்யா பழத்தில் அதிகமான நார்ச்சத்துக்கள் உள்ளது. ஊட்டச்சத்தின் சிறந்த மூலமாக இருக்கும் கொய்யாவில், ஃபோலேட், வைட்டமின்கள் A, C மற்றும் பொட்டாசியம் நிறைந்து காணப்படுகின்றது.
அவகோடா என்று அழைக்கப்படும் வெண்ணெய் பழத்தில் சுமார் 5 கிராம் நார்ச்சத்து இருக்கின்றது. மோனோசாச்சுரேட்டட் மற்றும் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் அதிகமாக இருக்கின்றது. மேலும் தாமிரம், ஃபோலலேட், வைட்டமின் கே மற்றும் பான்டோத்தெனிக் அமிலமும் நிறைந்து காணப்படுகின்றது.
நார்ச்சத்துக்கள் அதிகம் கொண்ட ராஸ்பெர்ரி பழங்கள் உயர் ரத்த அழுத்தம், ஆஸ்டியோபோரோசிஸ், இதய நோய் மற்றும் புற்றுநோய்களின் அபாயத்தை குறைக்கும் பைட்டோநியூட்ரியன்ட்கள் இருக்கின்றது.
இதே போன்று வைட்டமின் சி சத்துக்கள் அதிகம் கொண்ட பழமான ஆரஞ்சு பழத்தில் நார்ச்சத்துக்கள் அதிகமாக உள்ளதுடன், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாகவே இருக்கின்றது.
ஆப்ரிகாட் பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதுடன், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்களைக் கொண்ட இந்த பழத்தில் கலோரிகள் அதிகமாக இருக்கின்றது.
பொட்டாசியம் நிறைந்த வாழைப்பழத்தில் நார்ச்சத்து அதிகமாகவே இருக்கின்றது. தசைப்பிடிப்பைத் தடுக்க எளிதில் ஜீரணிக்கக்கூடிய கார்போஹைட்ரேட் மற்றும் பொட்டாசியம் வழங்குவதால் சிறந்த சிற்றுண்டியாகக் கருதப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |