சிறுவர்களின் மனதை நொடிப்பொழுதில் வென்ற ஆலு பிரெட் டிக்கிஸ்! 15 நிமிடங்களில் செய்யலாம்...
பொதுவாக வீடுகளிலுள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணப்படும் உணவுகளில் ஸ்நாக்ஸ் முக்கிய இடத்தை பிடித்துக் கொள்கிறது.
அதுவும் உருளைகிழங்கை வைத்து செய்யப்படும் ஸ்நாக்ஸ் என்றால் விரும்பாதவர்கள் என்று யாரும் இருக்க முடியாது. அந்தளவு சுவையும் ,மணமும், ஆரோக்கியத்தையும் இந்த உணவு கொடுக்கிறது.
அந்த வகையில் உருளைகிழங்கை வைத்து செய்யப்படும் ஆலு பிரெட் டிக்கிஸ் எவ்வாறு செய்வது குறித்து தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு, பிரெட் ஸ்லைஸ் - தலா 5
மிளகுத்தூள், மிளகாய்த்தூள், சாட் மசாலா - தலா அரை டீஸ்பூன்
எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு,எண்ணெய் - தேவையான அளவு
தயாரிப்பு முறை

முதலில் ஆலு பிரெட் டிக்கிஸ் செய்வதற்கு தேவையான கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
பின்னர் உருளைகிழங்கை ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும். அதனை எடுத்து மசித்துக் கொள்ள வேண்டும்.
இதனை தொடர்ந்து உருளைகிழங்கை வேறொரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் நீரில் நனைத்து ஒட்டப் பிழிந்த பிரெட் ஸ்லைஸ், கொத்தமல்லி, மிளகுத்தூள், மிளகாய்த்தூள், சாட் மசாலாத்தூள், எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்து என்பவற்றை சேர்த்து நன்கு பிசைந்து, விரும்பிய வடிவத்தில் தட்டியெடுக்க வேண்டும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் தட்டி வைத்து உருளைகிழங்கு உருண்டையெல்லாம் எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்க வேண்டும்.
இவ்வாறு செய்தால் நாம் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஆலு பிரெட் டிக்கிஸ் தயார்!