இனிப்பு சுவை கொண்ட குஜராத் ஸ்பெஷல் ஸ்ரீகண்ட்! இதை மட்டும் சேர்க்காமல் விட்டுறாதீங்க..
பொதுவாக வீடுகளில் மாலை நேரங்களில் டீ குடிக்கும் போது என்ன சேர்த்து சாப்பிடலாம் என்பது குறித்து சந்தேகம் இருக்கும்.
இதன்படி, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் விரும்பி சாப்பிடும் குஜராத் ஸ்பெஷல் ஸ்ரீகண்ட் எவ்வாறு செய்வது குறித்து தொடர்ந்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கெட்டி தயிர் - 250 ml
சர்க்கரை - 1/4 கப்
பாதாம் மற்றும் முந்திரி தலா - 10
உப்பு சேர்க்காத பிஸ்தா - 6-8
நம்பர்ஸ் ஏலக்காய் - 2
ஜாதிக்காய் பூ - 2 இழைகள்
செய்முறை
செய்முறை: முதலில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு முன்பு தயிரை எடுத்து ஒரு காட்டன் தூணியால் கட்டி, நன்றாக வடிக்கட்டிக் கொள்ளவும்.
பின்னர், பாதாம், முந்திரி, ஏலக்காய், பிஸ்தா மற்றும் ஜாதிக்காய் பூவும் என்பனவற்றை நறுக்கிக் கொள்ளும் பதத்திற்கு பொடியாக்கிக் கொள்ளவும்.
இதனை தொடர்ந்து ஒரு கடாயை அடுப்பில் வைத்து வடிகட்டிய தயிருடன் சர்க்கரை சேர்த்து கலவையாக கலந்து கொள்ள வேண்டும். ஒரு 5 நிமிடங்களுக்கு பின்னர் அதனுடன் பொடி செய்து வைத்துள்ள முந்திரி பாதாம் பொடியை என்பவற்றை கலந்துக் கொள்ளவும்.
இதன் பின்னர், இதனை ஒரு பவுலில் ஊற்றி குளிரூட்டியில் வைத்துக் கொள்ள வேண்டும். தற்போது ஆவலுடன் எதிர்பார்த்த குஜராத் ஸ்பெஷல் ஸ்ரீகண்ட் தயார்!
முக்கிய குறிப்பு
ஜாதிக்காய் பூ பதிலாக ஒரு சிட்டிகை ஜாதிக்காய் பொடி பயன்படுத்தலாம்.