தாறுமாறாக எடையைக் குறைத்து அதிசயம் செய்யும் ஓட்ஸ் பொங்கல்!
பொதுவாக தற்போது இருக்கும் ஆண் பெண்கள் என இருபாலாரும் ஜிம்மை தேடி தான் அதிகம் ஓடுவார்கள். காரணம் என்ன தெரியுமா?
நாம் கண்ணில் காணும் அணைத்து உணவுகளையும் எடுத்துக் கொண்டு வயதிற்கு மீறிய உடலை வைத்துக் கொண்டு ஜீம்மை தேடிக் கொண்டு இருப்பார்கள்.
ஆனால் சிலருக்கு மாத்திரமே இந்த விடயம் பயனளிக்கும், இன்னும் சிலர் எளிய வழியில் அல்லது சாப்பாட்டின் மூலம் குறைக்கலாம் என ஆர்வமாக தேடுவார்கள்.
இவ்வாறு தேடுபவர்கள் தான் நெல்லிக்காய் ஜீஸ், சீரக தண்ணீர் என பல வகையான டயட் பானங்களையும் எடுத்துக் கொள்வார்கள்.
அந்தவகையில் பானங்களை தவிர்த்து எவ்வாறு உணவுகளில் உடம்பை குறைக்கலாம் என்பது குறித்து தொடர்ந்து தெரிந்துக் கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
ஓட்ஸ் - 1 கப்
பாசிப்பருப்பு - 1/2 கப்
இஞ்சி - ஒரு சிறு துண்டு
பெருங்காயத்தூள் - இரண்டு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
தாளிக்க தேவையான பொருட்கள்
நெய் - 1 அல்லது 2 டீஸ்பூன்
மிளகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிது
முந்திரிப்பருப்பு - சிறிது (விருப்பப்பட்டால்)
தயாரிப்புமுறை
முதலில் ஒரு வாணலியை எடுதது அதில் ஓட்ஸ், பாசிப்பருப்பை என்வற்றை தனி தனியாகப் போட்டு வறுத்தெடுக்க வேண்டும். இதனை தொடர்ந்து தேவையான இஞ்சியை எடுத்து தோலை நீக்கிய பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
இதன் பின்னர் பச்சை மிளகாயை எடுத்து இரண்டு துண்டங்களாக கீறிக் கொள்வதோடு, மிளகு, சீரகம் இரண்டையும் ஒன்றிரண்டாக பொடித்துக் கொள்ளவும்.
இது ஒரு புறம் இருக்கையில், அடுத்த பக்கம் குக்கரில், வறுத்த ஓட்ஸ், பருப்பு, பொடியாக நறுக்கிய இஞ்சி, பெருங்காயத்தூள், உப்பு, மற்றும் 3 கப் தண்ணீரை விட்டு, மூடி, 3 அல்லது 4 விசில் வரும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
நன்றாக வெந்தவுடன் குக்கரிலிருப்பவைகளை நன்றாக மசித்துக் கொள்ள வேண்டும்.
இதன் பின்னர் ஒரு வாணிலியை அடுப்பில் வைத்து அதில் நெய் சேர்த்து அதில் முந்திரி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மிளகு, சீரகப் பொடியைப் போட்டு கிளறி விட்டு, அதன் மேல் தூவி விட்டால் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த ஓட்ஸ் பொங்கல் தயார்!