திடீர் உடற்பயிற்சி.. உணவு விஷயத்தில் கவனம் இல்லாவிட்டால் ஆபத்து
பொதுவாக தற்போது இருக்கும் தவறான உணவு பழக்கங்கள் மற்றும் மோசமான வாழ்க்கை முறை காரணமாக ஏகப்பட்ட விளைவுகள் ஏற்படுகின்றன.
இதனால் சிலர் உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்குள் வைக்கலாம் என்ற முயற்சியில் இறங்குவார்கள்.
முதன்முறையாக உடற்பயிற்சி மையத்தில் சேர்ந்து பலன் அடைய நினைப்பவர்கள் உணவு விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.
அந்த வகையில், முதல் முறையாக உடற்பயிற்சி செய்பவர்கள் என்ன மாதிரியான விளைவுகளை சந்திப்பார்கள் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
உடற்பயிற்சியின் போது கவனிக்க வேண்டிய விடயங்கள்
1. உடற்பயிற்சி ஆரம்பிக்கும் முன்னர் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். இதனை தவிர்க்கும் பட்சத்தில் உடல் வறண்டு, சூடானால் வயிறு தொடர்பான பிரச்சினைகள் வரலாம்.
2. அடிக்கடி வெளி உணவுகளைச் சாப்பிடுபவராக இருந்தால், அதனை குறைத்து டயட்டில் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் வயிற்றுக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
3. வொர்க் அவுட் செய்த பின்னர் அடுத்த வேளை உணவை செரிமானம் செய்யும் அளவுக்கு இடைவெளி விட்டு சாப்பிட வேண்டும். ஏனெனின் வொர்க் அவுட் முடித்ததும் புரதச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்து கொள்வது உடலுக்கு அவசியம்.
4. காலையில் உடற்பயிற்சி செய்து விட்டு சரியாக 45 நிமிடங்கள் கழித்து காலையுணவை எடுத்து கொள்ளலாம். இது போஸ்ட் வொர்க் அவுட் எனப்படும் உடற்பயிற்சிக்கான மிகப்பெரிய ஆலோசனையாகும்.
5. ப்ரீ வொர்க் அவுட் என்பதில் வொர்க் அவுட்டுக்கு 40 நிமிடங்களுக்கு முன்பு மிதமாக ஏதேனும் சாப்பிடலாம். இதனை பின்பற்றினால் தான் செரிமானம் சீராக நடக்கும்.
6. வொர்க் அவுட் செய்வதற்கு முன்னர் வயிறு நிறைய எதையும் சாப்பிடக்கூடாது என்று நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.
7. சாதாரணமாக காலை 9 மணிக்கு காலையுணவு எடுத்து கொள்ளும் ஒருவர், சரியாக 12.30 மணிக்கு மதிய உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். இதற்கிடையில் 11 மணி வாக்கில் ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் எடுத்து கொள்வது உடலுக்கு நல்லது.
8. மீண்டும் 4 மணியளவில் ஏதேனும் சாப்பிட்டால் 7 மணிக்கு இரவு உணவை முடித்துவிட வேண்டும். 10 மணிக்கு தூங்க சென்று விட வேண்டும். இதனை சரியாக தெரிந்து வைத்திருந்தால் உடற்பயிற்சியின் முழு பலனை பெறலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |