உடலுக்கு பல சத்துக்களை தரும் ஓட்ஸ் ஆம்லெட் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்.. எப்படி செய்யனும் தெரியுமா?
ஓட்ஸ் மற்றும் முட்டையை வைத்து சத்தான காலை உணவான Oats Vegetable Omelette எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக காலையில் நாம் எடுத்துக் கொள்ளும் உணவு சத்தானதாக இருக்க வேண்டும். காலை உணவு தான் நாள் முழுவதும் நம்மை சுறுசுறுப்பாகவும், புத்துணர்ச்சியாகவும் வைக்கின்றது.
ஆனால் பெரும்பாலான மக்கள் காலையில் இட்லி, உப்புமா, தோசை இவற்றினை சாப்பிடுகின்றனர். ஓட்ஸையும் உணவில் பயன்படுத்துகின்றனர்.
ஓட்ஸைக் கொண்டு இட்லி, உப்புமா இவற்றினை செய்யாமல் ஆம்லேட் செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

தேவையான பொருட்கள்
ஓட்ஸ் - 2 டேபிள் ஸ்பூன்
பால் - சிறிது
முட்டை - 2-3
வெங்காயம் - பாதி (பொடியாக நறுக்கியது)
சிறிய கேரட் - 1 (துருவியது)
குடைமிளகாய் - பாதி (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - பாதி (விதைகளை நீக்கி பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
உப்பு - சுவைக்கேற்ப
மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
செய்முறை
முதலில் ஓட்ஸை மிக்ஸி ஜாரில் சேர்த்து மென்மையாக பொடி செய்து கொள்ளவும். அதனை ஒரு கிண்ணத்தில் போட்டு, பால் சேர்த்து 10 நிமிடம் ஊற வைக்கவும்.
மற்றொரு பவுலில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக அடித்துக் கொள்ளவும். இதனுடன் ஊற வைத்த ஓட்ஸ் மற்றும் வெங்காயம், கேரட், குடைமிளகாய், பச்சைமிளகாய், தக்காளி, கொத்தமல்லியை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
தேவைக்கு ஏற்ப உப்பு மற்றும் மிளகுதூள் சேர்த்துக் கொள்ளவும். பின்பு தோசைகல்லில் ஆம்லேட் போன்று ஊற்றி எடுத்தால் சுவையான ஓட்ஸ் வெஜிடேபிள் ஆம்லெட் தயார்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |