வேர்க்கடலையை ஏன் இரவு முழுவதுமு் தண்ணீரில் ஊற வைத்து சாப்பிட வேண்டும்? தெரிஞ்சிக்கங்க
ஊறவைத்த பாதாம் பருப்பு என்பது மிகவும் உடலுக்கு நல்லது என்று அனைவரும் அறிந்ததே, அதே அளவுக்கு நன்மை, ஊறவைத்த வேர்கடலையிலும் கிடைக்கிறது என்பது நம்மில் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
வேர்க்கடலை என்பது பலவிதமான சத்துக்கள் நிறைந்த ஒரு அற்புதமான கடலை ஆகும் இதில் ஃபேட் புரோட்டின், புரதச்சத்து பொட்டாசியம் பாஸ்பரஸ், விட்டமின் பி மற்றும் மெக்னீசியம் உள்ளது.
வேர்கடலையானது மிகவும் ஆரோக்கியமான நொறுக்கு தீனி ஆகும். இதில் உள்ள ஒரே ஒரு பிரச்சனை என்னவென்றால் இது சற்று அதிகமான கலோரிகளை கொண்டது.
இருந்தாலும் உடல் எடையை குறைப்பதற்கு இந்த வேர்க்கடலை ஆனது பெரிதும் உதவுகிறது மற்ற நொறுக்குத் தீனிகளை சாப்பிடவதை தவிர்த்துவிட்டு அதற்கு பதில் நாம் வேர்க்கடலையை பயன்படுத்தலாம்.
இருதய ஆரோக்கியத்திற்கு
இருதய சம்பந்தப்பட்ட நோய்களுக்கு இந்த வேர்கடலையானது மிகவும் நன்மை அளிக்கக்கூடியது என்று கூறுகின்றனர்.
மாரடைப்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளிலிருந்து இது நம்மை காக்கும் என்று கூறுகின்றனர். இதில் அனைத்து விதமான சத்துக்களும் நிறைந்திருப்பதால் ரத்த ஓட்டம் இதய சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் போன்ற பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க உதவுகிறது.
இதை கொஞ்சம் கொஞ்சமாக பல நாட்கள் உண்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும் என்று கூறுகின்றனர்.
கேன்சர் செல்களை அழிக்க
இதில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்சிடென்ட் ஆனது உடலில் வளரும் கேன்சர் செல்களை அழிக்க முயற்சி செய்கிறது.
உடலிலுள்ள பல செல்கள் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும். அந்த பாதிப்பு உள்ளான செல்களை வேர்க்கடலையில் உள்ள சத்தானது அழித்து விடுகிறது.
வேர்க்கடலையில் மிகவும் அதிகமாக இரும்புச்சத்து,கால்சியம் ,ஜிங்க் போன்ற சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இவை கேன்சர் செல்களை மேலும் வளரவிடாமல் தடுக்கிறது மேலும் ஏற்கனவே இருக்கும் கேன்சர் செல்களை அழிக்க முயற்சி செய்கிறது.