கண் சிமிட்டலில் நீங்கள் அறியாக பல உண்மைகள்.. கண்டிப்பாக தெரிஞ்சிக்கோங்க
பொதுவாக கண்களுக்கு ஈரப்பதம் மற்றும் oxygen வழங்குவதற்காக தான் நாம் கண்களை சிமிட்டுகிறோம்.
இந்த செயற்பாடு சரியாக நடக்காவிட்டால் நம்மாள் பார்க்க முடியாது. இதில் வியக்கத்தக்க ஒரு விஷயம் என்னவென்றால் இரண்டு கண்ணும் ஒரே நேரத்தில் தான் சிமிட்டும்.
அந்த வகையில் கண் சிமிட்டல் தொடர்பான விளக்கங்களை தெரிந்து கொள்வோம்.
பொது கண் சிமிட்டம் பற்றியவை:
நரம்பானது இரண்டு கண்களுக்கும் ஒன்றி உள்ளது. அந்நரம்பு கண்களில் இருந்து செய்திகளை மூளைக்கு அனுப்பும் வேளையில் இரண்டு கண்ணும் சிமிட்டப்படும்.
உடனுக்குடன் கண்களை சிமிட்டக்கூடிய இச்செயலை கண் இமைகளுக்கு மேலும் அதற்கு இடையிலும் இருக்கக்கூடிய தசைகளின் செயல்பாடே காரணமாகும்.
தூசு ஏதேனும் விழுகையில் இது ஏற்படுகிறது. பொதுவான அந்நிரம்பு இச்செயல்பாட்டை உறுதி செய்வதாக அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த கண் சிமிட்டலானது எரிச்சலூட்டக்கூடிய அல்லது உறுத்தல் ஏற்படுத்தக்கூடிய பொருட்களில் இருந்து நம் கண்களை பாதுகாக்க உதவுகிறது.
கணினி செயல்பாட்டின் பொது செய்யக்கூடியவை:
கணினியை நீண்ட நேரம் பயன்படுத்தும்பொது கண் சிமிட்டுவதை பெரிதும் கடைப்பிடிப்பதில்லை. இதனால் கண்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படக்கூடும்.
அதை தவிர்க்க அடிக்கடி இடைவெளி எடுக்கவேண்டும். ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கு, 20 அடிகளுக்கு அப்பால் இருக்கக்கூடிய ஏதேனும் ஒரு பொருளை 20 நொடிகளுக்கு பார்ப்பதனால் 20-20-20 விதியானதை பின்பற்றி பாதிப்பில் இருந்து விடுபெற முடியும்.
கணினி பயன்படுத்தும் அனைவரும் அடிக்கடி கண் சிமிட்ட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும் . கண் வறட்சியை குறைக்க விரும்புபவர்கள் மருத்துவரை பரிந்துரைத்து உரிய Eye drops யை பயன்படுத்தலாம்.
கணினி settingsல் lighting மற்றும் screen நிலையை உங்கள் கண்ணுக்கு தகுந்தவாறு மாற்றி glare அடிக்காதவாறு செயல்படுத்துவதை உறுதி செய்யவேண்டும் அல்லது glare filterகளை பயன்படுத்தலாம்.
கணினி பயன்படுத்தும்போது உங்கள் கண்களுக்கு அழுத்தம் ஏற்படாமல் இருக்க brightness மற்றும் contrast யை சரிசெய்து பயன்படுத்த வேண்டும்.
தூங்க செல்வதற்குமுன் கணினி முன் செலவழிக்கும் நேரத்தை குறைத்துக்கொள்வது உங்களுக்கு நல்ல தூக்கத்தை கொடுக்க உதவும்.பக்கவாதம்,காயம், மற்றும் கண் சார்ந்த நோய்களானது கண் சிமிட்டல் குறைவதனால் ஏற்படக்கூடும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |