சருமத்தை பாதுகாக்கணுமா? அதற்கு இந்த ஒரு வேர் போதும்
வெட்டி வேர்கள் பொதுவாக கூந்தல் பராமரிப்பிற்கு பயன்படுத்துவார்கள். இந்த வெட்டி வேர் உடலின் வெளிப்புற பராமரிப்பிற்கு மட்டுமல்லாமல் உடலின் உட்புறத்தையும் பாதுகாக்கிறது.
இந்த வேரில் இரும்பு ,மக்னீசியம் ,பி6 வைட்டமின் போன்றவை காணப்படுகின்றது. இதில் 300 ற்கும் அதிகமான என்சைம்கள் செயற்பாட்டிற்கு துத்தநாகம் காணப்படுகின்றது.
இந்த சத்துக்கள் நமது உடலில் புதிய செல்களை வளர்க்க உதவும். மற்றும் நமது உடலின் செல்களின் பிரிவுச்செயற்பாட்டில் மிகவும் பங்களிப்பு செய்யும்.
இந்த வெட்டி வேர்களில் வேறென்னலாம் பயன் கிடைக்கின்றது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
வெட்டி வேர்
இது நோய் எதிர்ப்பு சக்திக்கு அருமருந்தாக வேலை செய்கிறது. வெயில் காலத்த்தில் வரக்கூடிய நீர்க்கடுப்பு, காய்ச்சல், சோர்வு போன்றவற்றிக்கு ஒரு சிறந்த மருந்தாகும்.
உடலில் உஷ்னம் அதிகமாக காணப்படுபவர்கள் இந்த வேரின் பொடியை கருஞ்சீரக பொடியுடன் சேர்த்து தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும்.
இதனால் கடுமையான வயிறு வலி போன்றவற்றிற்கு இது உதவும். வயதானவர்களுக்கு இருக்க கூடிய கால் எரிச்சல், கால் வலி போன்றவற்றிற்கு இது மருந்தாக அமையும்.
இதை தேங்காய் எண்ணெயுடன் கலந்து காய்ச்சி வடிகட்டி இரண்டு நாட்கள் கழித்து வலி இருக்கும் இடத்தில் பூச வேண்டும்.
உடல் சோர்வு காணப்பட்டால் இந்த வேரை மண்பானையில் போட்டு வைத்து அந்த தண்ணீரை குடித்து வந்தால் சோர்வு இல்லாமல் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம்.
வெட்டி வேரின் பொடியை எண்ணெயில் கலந்து சருமத்தில் பூசி வந்தால் சருமம் விஷ தொற்றுக்களில் இருந்து பாதுகாக்கப்படும்.
இதனால் முகப்பரு கிட்ட கூட வராது. வயதான சுருக்கத்தை தள்ளிப்போடுவதுடன், தோல் புற்றுநோயை அண்டவிடாமல் தடுக்கும் பண்பு வெட்டி வேர்களுக்கு உண்டு.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |