தினமும் யார் யார் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்? ஆய்வு செல்லும் தகவல்!
நம் வாழ்க்கைக்கு தண்ணீர் என்பது மிகவும் முக்கியமானது. இந்நீரை ஒருவர் ஒரு நாளில் எவ்வளவு அருந்த வேண்டும் என்பது பற்றிய ஆய்வில் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது.
எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்
எமது உடலில் 60 சதவீத அளவிற்கு தண்ணீர் தான் இருக்கிறது. இது நுரையீரலில் 83 சதவீதமும் இதயத்திற்கும் மூளைக்கும் 73 சதவீதமும் 31 சதவீதம் எலும்பிலும், தசைகள் மற்றும் சிறுநீரகங்களுக்கு 79 சதவீதமும் தண்ணீர் இருப்பதாக அமெரிக்க புவியியல் ஆய்வு சொல்கிறது.
நமது உடலை வெப்பநிலையில் இருந்து பராமரிக்க உடலில் உள்ள ஒவ்வொரு செல்களுக்கும் தண்ணீர் மிகவும் தேவையானதாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் உடலில் சிறுநீர் வழியாகவும், வியர்வை வழியாகவும் அதிக நீரை உடல் இழக்கிறது அதனால் நீரிழப்பை தடுப்பதற்காகவே நாம் தினமும் அதிக அளவில் தண்ணீரை குடிக்க வேண்டும்.
பொதுவாகவே எம்மில் நாளொன்றுக்கு 2 லீட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று பல கருத்துக்கள் நிலவிய வேலையில் அது வெறும் பொய்யான தகவல் என்று அபெர்டீன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.
அந்த ஆய்வில் தாகமாக இல்லாவிட்டாலும் தொடர்ந்தும் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று ஆய்வு சொல்கிறது. அதில், 20-34 வயதுடையவர்களுக்கு அதிக தண்ணீர் தேவைப்படுகிறது.
இவர்களுக்கு ஒரு நாளைக்கு 4.2 லீட்டர் தண்ணீர் தேவைப்படும்.
20-40 வயதான பெண்களுக்கு நாள் ஒன்றுக்கு 3.3 லீட்டர் தண்ணீர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என கண்டறிந்துள்ளனர்.