பண்டிகை பலங்காரங்களால் செரிமான பிரச்சினையா? அப்போ இந்த பதிவு உங்களுக்காக தான்
பொதுவாக தமிழர்களின் பண்டிகைகள் என்றால் பலகாரங்கள் இல்லாமல் இருக்காது. அதிலும் இனிப்புகள் மலையாய் குவிந்திருக்கும்.
அப்படி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல வீடுகளில் விருந்துபசாரங்கள் பலமாக இருக்கும். இந்த காலப்பகுதியில் நாம் செய்யும் பலகாரங்கள் மற்ற வீடுகளுக்கு போகும். அவர்கள் செய்யும் பலகாரங்கள் நமது வீடுகளுக்கு வரும்.
இது போன்று பண்டமாற்று முறையில் இனிப்புகளை சாப்பிட்டு கொண்டிருக்கும் நாம், இன்னும் சில மணிநேரங்கள் அல்லது நாட்களில் கடுமையான செரிமான கோளாறு பிரச்சினைகளுக்கு முகங் கொடுக்கலாம்.
அந்த வகையில் தீபாவளி கொண்டாட்டத்தினால் செரிமான கோளாறுகள் ஏற்படாமல் எப்படி எம்மை பாதுகாத்து கொள்வது என்பது பற்றி தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
தீபாவளி பலகாரத்தினால் பிரச்சினையா?
1. தீபாவளி கொண்டாட்டங்களின் போது பல நிறங்களில் இனிப்புக்கள் குவிந்திருக்கும். அதனை பார்த்து விட்டு அளவுடன் எடுத்து கொள்வது சிறந்தது. ஏனெனின் கொழுப்பு மற்றும் சர்க்கரை அதிகளவில் இந்த உணவுகளில் இருக்கும். அளவிற்கு அதிகமாக எடுத்து கொண்டால் வீக்கம், வயிற்றுப்போக்கு மற்றும் அஜீரண கோளாறுகள் ஏற்படலாம்.
2. நீரிழிவு நோயாளிகள் இனிப்புகள் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை குறைவாக உட்கொள்ள வேண்டும். அளவு அதிகமாகும் பட்சத்தில் பக்க விளைவுகள் பயங்கரமாக இருக்கும்.
3. இனிப்புகளுடன் சேர்த்து காரமான உணவுகளும் இருக்கும். ஏனெனின் காரமான உணவுகள் எண்ணெய் பொறிக்கப்பட்டிருக்கலாம். இதனால் ஆசிட் பெப்டிக் கோளாறு உள்ளவர்களுக்கு நெஞ்செரிச்சல், வயிற்று வலி மற்றும் குமட்டல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
4. பண்டிகைகளின் போது டிஸ்ஸ்பெப்டிக் அறிகுறிகளின் அபாயத்தை குறைப்பதற்காக காரம் குறைந்த உணவுகளை சாப்பிடுமாறு மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |