Sri lanka Reecha :பலரது கவனத்தையும் ஈர்த்துவரும் இலங்கை றீ(ச்)ஷாவின் ஆரோக்கிய உணவுகள்
இலங்கையில் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமான றீ(ச்)ஷா (Reecha) ஒருங்கிணைந்த பண்ணையில் (Reecha Organic Farm) ஆரோக்கிய உணவு வாரம் ஆரம்பமாகியுள்ளது.
கிளிநொச்சி இயக்கச்சியில் அமைந்துள்ள இந்த ஒருங்கிணைந்த பண்ணையின் பல்வேறு பயிர்ச்செய்கை, மீன் வளர்ப்பு, முட்டை கோழி வளர்ப்பு உட்பட பல்வேறு விடயங்கள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பண்ணையில் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக பல்வேறுபட்ட புதிய முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தற்போது பாரம்பரியமான முறையில் தயாரிக்கப்பட்ட ஆரோக்கியமான உணவு வகைகள் மக்களுக்கு பரிமாறப்படுகின்றது.
அத்துடன், றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் இயற்கை முறையில் உரங்களால் வளர்க்கப்பட்ட தேங்காய், மாம்பழம் மற்றும் காளான் ஆகிய பொருட்களும் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.
இதன்போது, காளான்கட்லட், கீரை பிட்டு, மரவள்ளி அவியல் மற்றும் காடை கோழி சூப் மற்றும் காளான் சூப் ஆகியவை இங்கு பறிமாறப்பட்டு வருகின்றது. இது தொடர்பான முழுமையான விபரங்களை இந்த காணொளியில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |