தினமும் ஒரு சிட்டிகை பெருங்காயம் சாப்பிட்டால் என்னென்ன நோய் தீரும்! எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா?
நோய்களைத் தவிர்ப்பதற்கு ஒரு சிட்டிகை பெருங்காயத்தை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இது வைரஸ் எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு, மயக்க மருந்து மற்றும் டையூரிடிக் பண்புகளுடன் நிறைந்துள்ளது. ஆனால் எல்லா நல்ல விஷயங்களையும் போலவே, இதனை மிதமான அளவில் எடுத்துக் கொள்வது தான் நம் உடலுக்கு நல்லது.
இனி அதன் ஆரோக்கிய நன்மைகள் பற்றி அனைத்தையும் தெரிந்து கொள்ள இந்த பதிவை மேலும் படியுங்கள். வாய்வு போன்ற செரிமான சிக்கல்களைத் தணிக்க இது உதவுகிறது. பெருங்காயம் ஆனது, ஆன்டி ஸ்பாஸ்மோடிக் மற்றும் ஆன்டி இன்ஃபிளாமேட்டரி பண்புகளைக் கொண்டுள்ளது. வீக்கம் மற்றும் வாய்வு போன்ற செரிமான சிக்கல்களைத் தீர்க்க உதவுகிறது.
நீங்கள் இதை உங்கள் உணவில் சேர்த்து பயன் பெறுங்கள். இதனை நீங்கள் தண்ணீரில் கரைத்து கூட தினமும் குடிக்கலாம்.பெருங்காயம் ஆனது, சக்தி வாய்ந்த ஆன்டி இன்ஃபிளாமேட்டரி, ஆன்டி வைரல் மற்றும் ஆண்டி பயாடிக் விளைவுகளைக் கொண்டுள்ளது.
ஒரு நாளைக்கு ஒரு சிட்டிகை பெருங்காயம் எடுத்துக் கொள்வது ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி, வறட்டு இருமல் போன்ற அறிகுறிளில் இருந்து உங்களுக்கு நிவாரணம் அளிக்கிறது மற்றும் மார்பு நெரிசலைக் குறைக்கிறது.
மேலும், கபத்தை விடுவிக்கவும் இந்த பெருங்காயம் உங்களுக்கு உதவுகிறது. ஹிங் அல்லது பெருங்காயம் ஆனது, இரத்த உறைவதை இயற்கையாகவே தடுக்கும் திறன் கொண்டது. மற்றும் உங்களின் இரத்த அழுத்த அளவைக் குறைக்க இது உதவுகிறது.
இதில் கூமரின் என்ற ஓர் கலவை உள்ளது, இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது, இதன் மூலம் இரத்த உறைவு ஏற்படுவதைத் தடுக்கிறது. பெருங்காயத்தில் உள்ள ஆன்டி இன்ஃபிளாமேட்டரி பண்புகள், உங்கள் தலையில் உள்ள இரத்த நாளங்களின் வீக்கத்தைக் குறைக்கின்றன.
இது தலைவலியில் இருந்து உங்களுக்கு நிவாரணம் அளிக்கிறது. சிறிது தண்ணீரில் ஒரு சிட்டிகை பெருங்காயம் சேர்த்து அதனை சூடாக்கி எடுத்துக் கொள்ளவும். இந்த கரைசலை ஒரு நாளைக்கு இரண்டு முறை குடிக்கவும்.