இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ நோயெதிர்ப்பு சக்தி குறையுதுன்னு அர்த்தம்
பொதுவாகவே நாம் உண்ணும் உணவின் மூலமும் முறையான உடற்பறிற்சி செய்வதன் மூலமும் தான் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும்.
உடற்பயிற்சி மற்றும் ஊட்டச்சத்து மிக்க உணவுகள் சரியான தூக்கம் போன்ற அனைத்து விடயங்களும் நோயெதிர்ப்பு மண்டலத்தில் தாக்கம் செலுத்தும் முக்கிய விடயங்களாகும்.
உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறைவடையும் போது உடல் சில அறிகுறிகளை வெளிப்படுத்தும்.இது குறித்து தெளிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
நோயெதிர்ப்பு சக்தி குறைவதற்கான அறிகுறிகள்
உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் பட்சத்தில் மன அழுத்தம் அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவதற்கான முதல் அறிகுறியாக இது பார்க்கப்படுகினறது.
தேவையற்ற மன அழுத்தத்தை உணர்கின்றீர்களானால் இது குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியம்.
நோயெதிர்ப்பு சக்தி குறைவடைந்தால் உடலில் வெள்ளை சிவப்பு அனுக்களின் எண்ணிக்கை குறைவடைந்து விடும்.
இதனால் இலகுவில் தொற்று நோய்களுக்கு ஆளாவீர்கள். காய்ச்சல், சளி அல்லது மற்ற பாக்டீரியல் தொற்றுகளை சந்திக்க நேரிடும்.
நோய் எதிர்ப்பு சக்தி குறையக் குறைய ஆரம்பிக்கும் இதனால் உடலின் ஆற்றலும் குறையும் எந்த வேலையையும் செய்ய முடியாத நிலை உருவாகும்.
இதனால் எப்போதும் உடல் சோர்வாக உணர்வீர்கள்.இரவில் சரியாக தூக்கம் வராது. பகலில் தூக்கம் வருவது போல் உணர்வீர்கள்.
தொடர்சியாக மூட்டு வலி மற்றும் உடல் வலியால் பாதிக்கப்படுகிறீர்கள் என்றால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து வருகின்றது என அர்த்தம்.
உடலில் காயங்கள் ஏற்படும் பட்சத்தில் அந்த இடத்தில் காயம் மறைந்து புதிய தோல் உருவாக நீண்ட நாட்கள் எடுத்தால் உடவில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவடைந்து வருவதாக அர்த்தம்.
இது போன்ற அறிகுறிகளை உணர்ந்தால் அலட்சியப்படுத்த கூடாது. இந்த அறிகுறிகளை உணர்ந்தால் நோயெதிர்ப்பு சத்தியை அதிகரிக்கும் உணவுகள் தொடர்பில் அக்கறை செலுத்த வேண்டியது அவசியம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |