சுகர் நோயாளியின் எடையை இரண்டே நாளில் குறைக்கனுமா? இதோ சூப்பர் பானம்...வெறும் வயிற்றில் குடிங்க!
அதிகப்படியான தொப்பையால் அவதிப்படுகிறவர்களுக்கு கேழ்வரகு கூழ் சிறந்த உணவு.
சுகர் நோயாளிகள் பலரும் தொப்பை கரைக்க சிரம படுவார்கள்.
அவர்களுக்கு தொப்பை கரைந்து, தட்டையான வயிறைப் பெற வேண்டுமென்றால் தினமும் காலையில் ராகி கூழ் சாப்பிட வேண்டும்.
கேழ்வரகு கூழ் சாப்பிடுவதனால் அதில் உள்ள அதிக அளவிலான அமினோ அமிலங்கள் அடிக்கடி பசி எடுப்பதைத் தடுக்கும்.
இனி கேழ்வரகு கூழ் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கேழ்வரகு மாவு - 4 கப்
- அரிசி நொய் - 2 கப்
- தயிர் - 3 கப்,
- உப்பு - தேவையான அளவு
செய்முறை
கேழ்வரகு மாவை முதல் நாள் இரவே மூன்று பங்கு தண்ணீர் ஊற்றிக் கரைத்து வைக்கவும்.
மறுநாள் மாலை ஒரு பெரிய பாத்திரத்தில் ஆறு கப் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். நன்றாகக் கொதித்ததும் நொய்யைக் கழுவிப் போடவும்.
நொய் வெந்ததும் கரைத்து வைத்துள்ள மாவைச் சேர்த்துக் கட்டியில்லாமல் கிளறவும்.
மாவு வெந்ததும் இறக்கவும். மறுநாள் காலை காய்ச்சிய கூழுடன் உப்பு, தண்ணீர் சேர்த்துக் கரைக்கவும்.
வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிச் சேர்த்தால், சுவை அலாதியாக இருக்கும். தண்ணீருக்குப் பதில் மோர் ஊற்றியும் குடிக்கலாம்.