உடலில் இருக்கும் கெட்ட நீரை வெளியேற்றி தீராத நோய்களை விரட்டி அடிக்கும் கொள்ளு! எப்படியெல்லாம் சாப்பிடலாம்?
“இளைத்தவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்குக் கொள்ளு” என்று சொல்வார்கள். கொள்ளில் அத்தனை அற்புதங்கள் நிறைந்திருக்கிறது.
உங்களுக்கு எந்த வியாதி வந்தாலும் அதற்கு கொள்ளு சிறந்த தீர்வாகவே மாறும். கொள்ளில் கல்சியம், மெக்னீசியம், புரதம், இரும்புசத்து, மாவுசத்து, நார்ச்சத்து, பாஸ்போரோஸ், பொற்றாசியம் போன்ற பலவித சத்துக்கள் நிறைந்துள்ளது.
கொள்ளுவின் நன்மைகள்
- உடல் எடை குறையும்
- ஆரோக்கியமான இதயம்
- மலசிக்கல் இரத்த
- சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கும்
- சிறுநீரக கற்கள் வராமல் காக்கும்
- மூல நோய்க்கு மிகவும் சிறந்தது
- தசைகளின் வளர்ச்சி
எப்படி சாப்பிடலாம்.....
கொள்ளுப் பருப்பை ஊற வைத்து, அந்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறி விடும். கொள்ளை நீரிலிட்டு கொதிக்க வைத்து அந்நீரை அருந்த ஜலதோஷம் குணமாகும்.
உடல் உறுப்புக்களைப் பலப்படுத்தும். வயிற்றுப்போக்கு, வயிற்றுப் பொருமல், கண்ணோய்கள் போன்றவற்றையும் கொள்ளு நீர் குணப்படுத்தும்.
வெள்ளைப் போக்கைக் கட்டுப்படுத்துவதுடன் மாதாந்திர ஒழுக்கை சரிப்படுத்தும். பிரசவ அழுக்கை வெளியேற்றும்.
கொள்ளும் அரிசியும் கலந்து செய்யப்பட்ட கஞ்சி பசியைத் தூண்டுவதுடன் தாதுவைப் பலப்படுத்தும். குழந்தைகளுக்கு சளி பிடித்து இருந்தால் கொள்ளு சூப் வைத்து குடித்தால் சளி காணாமல் போய் விடும். உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் அருந்தலாமாம்.
சாப்பாட்டில் அடிக்கடி கொள்ளு சேர்த்துக் கொள்வது உடல் எடையை குறைக்கும்.
இரவில் ஒரு கைப்பிடி கொள்ளு எடுத்து தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் சாப்பிட்டால் உடல் எடை குறையும்.
கொள்ளை அரைத்து பொடி செய்து வைத்துக் கொண்டால், ரசம் வைக்கும் போது சிறிது பயன்படுத்தலாம். சிலருக்கு வாயுக்களின் சீற்றத்தால் எப்போதும் வயிறு மந்தமாகவே இருக்கும்.
கொள்ளுவை அரிசியுடன் சேர்த்து கஞ்சியாகவோ, கொள்ளுவை வறுத்து துவையலாகவோ அல்லது ரசம் செய்தோ சாப்பிட்டு வந்தால் நன்கு பசி உண்டாகும்.
கொள்ளில் ஏராளமான நன்மைகளும் சித்த மருத்துவத்திற்கும் ஏற்றதாக கொள்ளு அமைந்திருக்கிறது.