மாதவிடாய் வயிற்று வலியால் சிரமப்படுறிங்களா? வலியை குறைக்கும் கருணைக்கிழங்கு
நமது உடலில் ஏற்படும் நோய்களை மருந்து மாத்திரைகளால் குணப்படுத்த முடியாமல் இருப்பதை கூட ஆரோக்கியமான உணவுகள் குணப்படுத்துகின்றன.
இயற்கையில் கிடைக்கூடிய உணவுகளை நாம் தவறவிடாமல் அதை உண்பது அவசியம்.
அந்த வகையில் கருணைக்கிழங்கு உண்பதால் இது உடலில் என்னென்ன நோய்கள் குணமாகின்றது மற்றும் என்னென்ன பயன் கிடைக்கின்றது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
கருணைக்கிழங்கு
கருணைக்கிழங்கில் இரண்டு வகைகள் உள்ளன. இந்த கிழங்கை புளி சேர்த்து சமைத்தால் தான் இதிலுள்ள நமைச்சல் குணம் அற்றுப்போகும்.
புளி சேர்க்க விரும்பாதவர்கள் மோர் சேர்த்தும் சமைக்கலாம். இந்த கிழங்கை அரிசி கழுவிய நீரில் கழுவி எடுத்தால் இதில் இருக்கும் நமைச்சல் குணத்தை இல்லாமல் செய்ய முடியும்.
இந்த கிழங்கை சாப்பிட்டு வந்தால் ஜீரண சக்தி கிடைக்கும். இதில் வைட்டமின் C, ஆன்ட்டி ஆக்சிடென்ட்டுகள் எனும் சத்துக்கள் அதிகமாக இருக்கின்றன.
மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த கிழங்கை தொடர்ந்து சாப்பட்டு வந்தால் மூலநோய் இல்லாமல் போகும். மாதவிடாய் பிரச்சினைகளுக்கு இந்த கிழங்கின் மூலம் தான் மருந்து தயாரிக்கின்றார்கள்.
எனவே மாதவிடாய் வருவதற்கு முன்னர் இந்த கிழங்கை அவித்து மசித்து ஒரு ஸ்பூன் வெல்லத்துடன் கலந்து சாப்பிட்டால் மாதவிடாய் நேரத்தில் வரும் கால் வலி, இடுப்பு வலி ,வயிற்று வலி போன்ற பிரச்கனைகள் இல்லாமல் செய்யும்.
இந்த நேரத்தில் ஈஸ்ட்ரோஜன் அளவை இந்த கிழங்கு அதிகப்படுத்துகிறது. இதை தொடர்ந்து சாப்பிடுவதால் குடலில் நச்சுக்கள், கிருமிகள், கொழுப்புகள் சேராமல் தடுக்கப்படுகின்றன.
உடல் எடையை ஆரோக்கியமாக குறைப்பவர்கள் இந்த கிழங்கை உணவில் சேர்த்து கொள்ளலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |