'வெள்ளைத் தங்கம்' எனப்படும் ஒட்டகப்பால் - அப்படி என்ன இருக்கு இந்த பாலில்?
அரிதாக கிடைக்கும் விலையில் மிகவும் அதிகமான அதுவும் வெள்ளை தங்கம் எனப்படும் ஒட்டகப்பால் பசும்பால் மற்றும் எருமை பாலை விட எவ்வகையில் நன்மை தருக்கிறது என்பதை பதிவில் பார்க்கலாம்.
ஒட்டகப்பால்
ஒரு காலத்தில் பாலைவனச் சூழலில் வாழும் மக்களிடையே மட்டுமே பிரபலமாக இருந்த ஒட்டகப் பால் தற்போது தமிழ்நாட்டிலும் பிரபலமடைந்தது. ஆனாலும் தமிழ்நாட்டில் ஒட்டகப் பால் அருந்தும் சூழல் எல்லோருக்கும் அமையவில்லை.
அது பயன்பாட்டில் பெரிதளவில் இல்லாமலும் இருந்தது. இந்நிலையில் தனது அசத்தலான நன்மைகளால், தற்போது உலகளவில் கவனத்தைப் பெற்று வருகிறது ஒட்டகப்பால்.
அதுவும், பலர் ஒட்டகப்பாலை விரும்பி குடிக்கின்றனராம்.பசுவின் பாலை விட ஜீரணிக்க எளிதான இந்த தனித்துவமான பால் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது, குறைந்த கொழுப்பு கொண்டது மற்றும் நவீனகால சூப்பர்ஃபுட்டாக தனித்த இடத்தை பெற்றுள்ளது.

ஒட்டகப்பாலின் நன்மைகள்
இதுவரை ஒட்டகங்கள் இதுவரை அவை போக்குவரத்துக்காகவும், பொருட்களை ஏற்றிச் செல்லவும் பயன்படுத்தப்பட்டன. ஆனால், இப்போது ஒட்டகப் பாலின் பயன்பாடு பரவலாக அதிகரிக்க வாய்ப்புள்ளது.
ஒட்டகங்களில் இரண்டு வகைகள் உள்ளன. இரண்டு திமில்கள் கொண்ட ஒட்டகம் (கேமலஸ் பாக்ட்ரியானஸ்) மற்றும் அரேபிய அல்லது ஒற்றைத் திமில் கொண்ட டிரோமெடரி ஒட்டகம்.
இந்த ஆராய்ச்சியின் படி, ஒட்டகப் பாலில் பசுவின் பாலை விட மூன்று முதல் ஐந்து மடங்கு அதிகமாக வைட்டமின் சி உள்ளது. இதன் பிஹெச் அளவு 6.2 முதல் 6.5 வரை இருக்கும், இது பசுவின் பாலின் அளவை (6.5-6.7) விட சற்று குறைவாகும்.

பசு மற்றும் எருமைப் பாலில் காணப்படும் 'பீட்டா-லாக்டோகுளோபுலின்' என்ற புரதம், பலருக்கு (குறிப்பாகச் சிறு குழந்தைகளுக்கு) ஒவ்வாமையை ஏற்படுத்துவதற்கு முதன்மைக் காரணமாகக் கருதப்படுகிறது.
ஒட்டகப் பாலின் புரத அமைப்பு, பசுவின் பாலை விட மனிதப் பாலுடன் அதிக ஒற்றுமையைக் கொண்டுள்ளது.ஒட்டகப் பாலில் பீட்டா-லாக்டோகுளோபுலின் இல்லாததால், இது எளிதில் செரிமானமாகிறது.
பால் குடித்த பிறகு வாயுத் தொல்லை, அசிடிட்டி அல்லது வயிறு கனமாக இருப்பது போன்ற உணர்வு ஏற்படுபவர்களுக்கு ஒட்டகப் பால் ஒரு சிறந்த மாற்றாகும்.

இதில் பசு அல்லது எருமைப் பாலை விட மிகக் குறைந்த அளவே கொழுப்பு உள்ளது. ஒட்டகப் பாலில் வைட்டமின் பி1, பி2 மற்றும் சி போன்ற வைட்டமின்கள் நிறைந்துள்ளன.
இதில் பசுவின் பாலை விட மூன்று முதல் ஐந்து மடங்கு அதிக வைட்டமின் சி இருப்பதால், வறண்ட பகுதிகளில் வசிப்பவர்களுக்கு இது உணவின் முக்கியப் பகுதியாக அமைகிறது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |