இனி ஒதுக்காம சாப்பிடுங்க.. உச்சி முதல் பாதம் வரை ஆராக்கியம் தருமாம்- மருத்துவ பலன்கள்
பாகற்காயில் இருக்கும் கசப்பு சுவை காரணமாக அதனை பலரும் உணவில் இருந்து ஒதுக்கி சாப்பிடுகிறார்கள்.
ஆனால் பாகற்காய் சாப்பிடுவதால் சருமம் முதல் தலைமுடி வரையிலான ஒட்டு மொத்த உடலுக்கும் ஆரோக்கியம் கிடைக்கிறது.
பாகற்காயை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொள்வது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது.
இது போன்று ஏகப்பட்ட ஆரோக்கிய நன்மைகள் பாகற்காயில் உள்ளது.
பாகற்காய் சமைக்கும் பொழுது சில உணவு பொருட்கள் சேர்த்து கொண்டால் அதிலிருக்கும் கசப்பு தன்மை இல்லாமல் போய் விடும்.
அந்த வகையில் உணவில் அடிக்கடி பாகற்காய் சேர்த்து கொண்டால் என்னென்ன பலன்கள் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
பாகற்காயில் உள்ள மருத்துவ பலன்கள்
1. பாகற்காய் சாப்பிடுவதால் இரத்தத்தின் சர்க்கரை அளவு கட்டுபடுத்தப்படுகின்றது. அத்துடன் இது இன்சுலின் உற்பத்தியை அதிகரித்து குளுக்கோஸ் அளவை குறைக்க உதவுகிறது.
2. இதயம் சார்ந்த நோயுள்ளவர்கள் தாராளமாக பாகற்காயை சாப்பிடலாம். அத்துடன் மாரடைப்பு, பக்கவாதம் நோய் அபாயம் பாகற்காய் சாப்பிடுபவர்களுக்கு சற்று குறைவாக தான் இருக்கும்.
3. பாகற்காயில் அதிகமான நார்ச்சத்துக்கள் இருப்பதால் எடை இழப்பிற்கு பெரிதும் உதவியாக இருக்கின்றது. பாகற்காய் சாப்பிட்டால் இலகுவில் சமிப்பாடு அடையாது. ஆகவே பசி என்பது குறைவாக தான் இருக்கும்.
4. மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, வயிற்று மந்தம் உள்ளிட்ட பிரச்சினைளுக்கு பாகற்காய் உடனடி தீர்வு தரும். தொடர்ந்து குடல் ஆரோக்கியமும் மேம்படுத்தப்படுகின்றன.
5. அடிக்கடி பாகற்காய் சாப்பிடும் ஒருவருக்கு கல்லீரலில் தேங்கி இருக்கும் நச்சுக்கள் வெளியேறும். அடிக்கடி நோயினால் அவஸ்தைப்படுவர்களுக்கு பாகற்காய் கொடுக்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |