வாழையிலையில் இவ்வளவு நன்மைகளா? இது தெரியாமப் போச்சே!
தமிழர் பாரம்பரியம் என்று கூறினால், அதற்குள் நிறைய விடயங்கள் உள்ளடங்கும். அவற்றுள் மிகவும் முக்கியமானது வாழையிலை.
எந்தவொரு விசேஷத்திலும் வாழையிலையை நம்மால் காண முடியும். என்னதான் காலம் மாறிக்கொண்டே வந்தாலும் இந்த வாழையிலையின் பயன்பாட்டில் மட்டும் எந்தவொரு மாற்றமும் இல்லை.
ஏனென்றால், இது தமிழரின் அடையாளம் மட்டுமல்ல இதில் ஏராளமான நன்மைகளும் உள்ளடங்கியுள்ளன. இந்த வாழையிலையினால் என்னென்ன நன்மைகள் என்று பார்ப்போம்...
வாழை இலையில் பேக்கிங் செய்யும் உணவுப் பொருள் நல்ல மணமாகவும் கெட்டுப் போகாமலும் இருக்கும்.
தீக்காயம் ஏற்பட்டவர்களை வாழையிலையில் படுக்க வைத்தால்தான் சூட்டின் தாக்கம் குறைவடையும்.
தோல் புண், காயம் போன்றவற்றுக்கு தேங்காய் எண்ணெயை துணியில் நனைத்து காயத்தின்மேல் தடவி வாழையிலையில் கட்டுப்போட்டால் காயம் குணமாகும்.
வாழையிலையில் உண்பதால் இளநரை வராது. அதிக நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும்.
சிறு குழந்தைகளை வாழையிலையில் கிடத்தி காலை சூரிய ஒளியில் படுக்க வைத்தால் சரும நோயிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும்.
படுக்கை புண், சின்ன அம்மை போன்றவற்றுக்கு வாழையிலையில் தேன் தடவி தினமும் சில மணி நேரம் படுக்க வைத்தால் விரைவில் குணமாகும்.