தினமும் மொச்சை கொட்டை சாப்பிடலாமா? எப்படி பார்த்து வாங்குவது! இனி தெரிஞ்சிக்கங்க
ஆரோக்கியமான உணவு வகைகளில் மொச்சை கொட்டைக்கு என்று தனி இடம் உண்டு. வெள்ளை மொச்சை, கருப்பு மொச்சை, சிவப்பு மொச்சை, மர மொச்சை, நாட்டு மொச்சை என பல வகைகள் இருக்கின்றன.
மொச்சைக் கொட்டையில் குறிப்பிட்ட அளவு நார்ச்சத்து, பொட்டாசியம், போலேட் மற்றும் சபோனின் போன்றவை உள்ளன.
பெரும்பாலோனார் மொச்சையை சாப்பிட்டால் வாயுத் தொல்லை ஏற்படும் என்ற காரணத்தினால் ஒதுக்கி வைக்கின்றனர்.
இனி இந்த தவறை செய்யாதீர்கள். கட்டாயம் ஏன் உணவில் மொச்சையை சேர்த்து கொள்ள வேண்டும் என்று இனி தெரிந்து கொள்ளுங்கள்.
மொச்சைக் கொட்டையில் இருக்கும் நார்ச்சத்து இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கவிடாமல் தடுக்க உதவும்.
இதில் உள்ள பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் இதய நோய்க்கான அபாயத்தைக் குறைக்கிறது.
மொச்சையில் உள்ள கரையாத நார்ச்சத்து மலச்சிக்கலுக்கான வாய்ப்பை குறைக்கிறது.
பெருங்குடல் பகுதியில் புற்று நோய் உண்டாக்கும் ரசாயனங்களைத் தடுக்கிறது. மொச்சைக் கொட்டை ஒரு சிறிய அளவு ‘ஜெனிச்டின் மற்றும் டைட்சின்’ என்னும் ஐஸோஃப்ளவன்களைக் கொண்டுள்ளது.
இது மார்பக புற்றுநோயைத் தடுப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. மொச்சைக் கொட்டையில் அதிக அளவு புரதச் சத்து உள்ளது. உடலின் அனைத்து செயல்பாடுகளையும் கட்டுப்படுத்த புரதம் உடலுக்கு மிகவும் அவசியம்.
மொச்சை கொட்டை உடலில் உள்ள கொழுப்புகளை குறைத்து கலோரிகளை எரிக்கும்.
மொச்சையில் நார்ச்சத்து உள்ளதால் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும். பெரும்பாலோனார் வாயுத் தொல்லை ஏற்படும் என்ற காரணத்தினால் மொச்சையை ஒதுக்கி வைக்கின்றனர்.
மொச்சையை வேக வைக்கும் போது இஞ்சி, பூண்டு சேர்த்து சமைத்தால் வாய்வுத்தொல்லை ஏற்படாது. ஆரோக்கிய நன்மைகளை மொச்சை கொட்டை ஆண்களின் பல பிரச்சினைகளுக்க தீர்வு கொடுக்கின்றது.
அது மட்டும் இன்றி ஆண்களின் தாடி வளர்ச்சிக்கு உதவி புரிகின்றது.
மொச்சை கொட்டையை எப்படி வாங்குவது?
- காய்ந்த மொச்சைக் கொட்டைகளை வாங்கும்போது அவை சேதமில்லாத நல்ல கொட்டைகள் என்பதை உறுதி செய்து வாங்கவும்.
- கொட்டைகள் முழுமையாக உள்ளதா, ஈரமில்லாமல் உள்ளதா, விரிசல் இல்லாமல் உள்ளதா என்பதை பார்த்து வாங்கவும்.
- வாங்கி வந்தபின் காற்று புகாத டப்பாவில் குளிர்ச்சியான, வெயில் படாத இடத்தில் வைக்கவும்.
- பச்சை மொச்சை வாங்கும்போது பளபளப்பாக இருக்கும் கொட்டைகளை பார்த்து வாங்கவும்.
- மென்மையான சதைபற்றானதாக பார்த்து வாங்கவும்.
- அடுத்த சில தினங்கள் புதிது போல் இருக்க பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தவும்.
மொச்சைக் கொட்டையை எவ்வாறு சமைக்க வேண்டும்?
- காய்ந்த மொச்சை பயன்படுத்தினால், அதனைக் கழுவி, ஒரு இரவு முழுவதும் ஊற வைத்து பின்பு பயன்படுத்த வேண்டும்.
- வேக வைப்பதற்கு முன்னர், ஊற வைத்த மொச்சையில் உள்ள நீரை வடிகட்டி, மீண்டும் ஒரு முறை தண்ணீரில் நன்றாக அலசி பிறகு வேக வைக்கவும்.
- பச்சை மொச்சை பயன்படுத்தும்போது, அதனை ஊற வைக்க வேண்டிய அவசியம் இல்லை.
-
சமைப்பதற்கு முன்னர் அதனை எடுத்து அப்படியே பயன்படுத்தலாம்.
