வீட்டில் தக்காளி இருந்தால் இந்த பொருளை சேர்த்து ரசம் வைங்க! சுவை அட்டகாசம்
வீட்டில் தக்காளி வைத்து ரசம் வைக்கனும் என்றால் இந்த ஒரு பொருளை சேர்த்து வைத்தால் அது இன்னும் சுவையை அள்ளும்.

ரசம்
ரசம் வைக்கும் போது தக்காளி ரசத்திற்கு இருக்கும் வரவேற்பு அதிகம். தக்காளி ரசத்தை சுடு சோறுடன் சாப்பிட்டால் சுவை பிரமாதமாக இருக்கும்.
வெஜ் பிரியர்களுககு இந்த தக்காளி ரசத்தை வைத்து அதில் பொடியையும் சேர்த்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும். இதன் செய்முறை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
- தக்காளி,
- வெள்ளை பூண்டு,
- மிளகு,
- சீரகம்,
- கடுகு ,
- மிளகாய்,
- கருவேப்பிலை,
- கொத்தமல்லி,
- எண்ணெய்,
- மஞ்சள் தூள்,
- சாம்பார் பொடி,
- உப்பு
செய்முறை
ரசம் செய்ய முதலில் நான்கு தக்காளியை எடுத்து வேகவைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதன் தோலை எடுத்துவிட்டு அதை நன்றாக அரைத்து எடுக்க வேண்டும்.
பின்னர் வெள்ளை பூண்டு, மிளகு, சீரகம் ஆகியவற்றை இடித்துவிட்டு தனியாக எடுத்து வைக்கவும். பின்னர் பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடான உடன் கடுகு, வரமிளகாய், கருவேப்பிலை, மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து வதக்கி கொள்ளவும்.

இதில் அரைத்து வைத்த தக்காளியை சேர்த்து இதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மஞ்சள்தூள், இடித்ததை சேர்த்து விட்டு உப்பு, அரை டீஸ்பூன் சாம்பார் பொடி சேர்த்து நன்றாக கலக்கி மூடி வைத்து கொதிக்க விடவும்.
கொதித்த பின் கடைசியாக கொத்தமல்லி தூவினால் சுவையான ரசம் தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |