பாட்டியுடன் புஷ்பா பாடலுக்கு நடனமாடி அசத்திய ஹர்திக் பாண்டியா - இணையத்தில் வைரல்!
சமீபத்தில் வெளியான புஷ்பா திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்திருந்தது. அண்மையில் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியானதில் இருந்து பலரும் இந்த படத்தை பார்த்து ரசித்தனர்.
அதன்பின்னர், புஷ்பா படத்துல் வரும் படலுக்கு நடனமாடி பல பிரபலங்கள் வீடியோகளை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், இந்திய கிரிக்கெட் ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியா தற்போது ஸ்ரீவள்ளி பாடலுக்கு பாடலுக்கு தனது பாட்டியுடன் நடனமாடி வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அது மட்டுமில்லாமல், இறுதியில் பாட்டியுடன் புஷ்பா அல்லு அர்ஜுன் தாடியை வருடும் காட்சியையும் சேர்ந்து செய்கிறார்.
மற்ற கிரிக்கெட் வீர்ரகளின் வீடியோவைப் போல, தற்போது இந்த வீடியோவும் ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.