என் Retirement-க்கு தோனி தான் காரணம்... நீண்ட வருடத்திற்கு பின் அம்பலப்படுத்திய ஹர்பஜன் சிங்!
முன்னாள் சுழற்பந்துவீச்சாளரான ஹர்பஜன் சிங், தோனி மீது பகிரங்க குற்றச்சாட்டை நீண்ட வருடங்களுக்கு பின் அம்பலப்படுத்தியுள்ளார்.
கடந்த 2011 உலகக்கோப்பையில் ஹர்பஜன் தன் இடத்தை இழந்தார், 2013 சாம்பியன்ஸ் டிராபி, 2015 உலகக்கோப்பை என்று ஹர்பஜன் அணியில் தேர்வு செய்யப்படவில்லை.
மேலும், அடுத்த 5 ஆண்டுகளுக்கு அணிக்குள் வருவதும் போவதுமாக இருந்தார். இதனிடையே, தன்னை அணியிலிருந்து நீக்கிய தோனியிடம் ஏன் என்று கேட்டுள்ளார்.
அவர் தோனியிடம் கேட்டதாவது, “நான் கேப்டன் தோனியிடம் ஏன் என்னை தேர்வு செய்யவில்லை என்ன காரணம் என்று கேட்டேன். ஆனால் ஒரு பதிலும் அவரிடமிருந்து வரவில்லை.
பதில் அளிக்க மாட்டேன் என்று ஒருவர் இருக்கும் போது என்னை இப்படி நடத்தியதற்கான காரணத்தை நான் அவரிடம் கேட்டு என்ன பயன்? என்னை நீக்க யார் காரணம்? கேட்டேன் பதிலில்லை.
அதனால், யாருமே எதற்கும் பதில் சொல்லவில்லை என்றால் கேள்வி கேட்டு என்ன பயன் என்று விட்டுவிட்டேன்” என்றார் ஹர்பஜன் சிங் தெரிவித்து இருக்கிறார்.