அனுமனின் படத்தை மறந்தும் இந்த அறையில் வைக்காதீங்க- தம்பதிகளுக்கு ஆபத்து
அஞ்சனையின் மைந்தன், வாயு புத்திரன் என்றழைக்கப்படும் அனுமனின் பிறந்த நாளை தான் பக்தர்கள் அனைவரும் “அனுமன் ஜெயந்தி”யாக கொண்டாடுகின்றனர்.
இந்த வருடம் நவராத்திரி சைத்ராவிற்கு பதிலாக அனுமன் ஜெயந்தியின் போது பௌர்ணமி வருகிறது. இதனால் இந்த நாள் சிறப்பு வாய்ந்த நாளாக பார்க்கப்படுகிறது.
அப்படியாயின், அனுமன் புகைப்படத்தை வீட்டில் வைத்து பூஜை செய்தால் ஆசைகள் நிறைவேறும் என்பது ஐதீகம்.
அந்த வகையில், வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டில் உள்ள எந்த இடத்தில் அனுமன் படத்தை வைத்தால் அதிர்ஷ்டம் கிடைக்கும் என்பதனை பூரண விளக்கத்துடன் பதிவில் பார்க்கலாம்.
எங்கே வைக்கக்கூடாது?
அனுமன் பிரம்மாச்சாரியாக கருதப்படுவதால் அவரின் புகைப்படத்தை படுக்கையறைகளில் வைக்கக்கூடாது. மாறாக அப்படி இருந்தால் உடனடியாக அகற்றி விட வேண்டும்.
தம்பதிகளின் வாழ்க்கையில் தடைகள் இருப்பின் இந்த படத்தை உரிய இடத்தில் வைத்தால் பலன்கள் ஏராளம்.
அனுமன் படத்தை வீடு அல்லது கடைகள் வைக்கும் பொழுது தெற்கு திசையில் வைப்பது நல்லது. ஏனென்றால் அனுமன் தனது சக்திகளை தெற்கு திசையை நோக்கி தான் பயன்படுத்தியுள்ளார் என புராணங்கள் கூறுகிறது.
மற்ற திசைகளை விட தெற்கு திசையில் அனுமன் புகைப்படத்தை வைக்கும் பொழுது பணத்தட்டுப்பாடு ஏற்படாது. அத்துடன் அனைத்து வகையான அசுப விளைவுகளிலிருந்து அனுமன் உங்களை காப்பாற்றுவார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |