வருங்கால கணவருடன் ப்ரீ வெட்டிங் போட்டோஷூட்: வைரலாகும் ஹன்சிகாவின் புகைப்படம்
நடிகை ஹன்சிகா, தனது வருங்கால கணவருடன் பாரிஸில் உள்ள ஈஃபிள் டவர் முன்பு ப்ரீ வெட்டிங் போட்டோஷூட் நடத்தியுள்ள புகைப்படம் வைரலாகி வருகின்றது.
நடிகை ஹன்சிகா
மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான ஹன்சிகா, பல முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்களிடைய பிரபலமானார்.
தமிழ் சினிமாவில் சின்ன குஷ்புவாக வலம் வந்த இவர், சிம்புவுடன் நடித்ததோடு, அவரை காதலிக்கவும் செய்தார். இறுதியில் இவர்களின் காதல் பிரேக்கப் ஆகியதோடு, குறித்த படமும் சரியாக ஓடவில்லை.
பின்பு சினிமாவில் இருந்து விலகி இருந்த ஹன்சிகா தான் காதலித்து வந்த காதலரை திருமணம் செய்து ளொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியது. இவர்களின் திருமணம் வரும் டிசம்பர் மாதம் 4ம் தேதி ஜெய்ப்பூரில் உள்ள 450 ஆண்டுகளான பழமைவாய்ந்த அரண்மனையில் நடைபெறறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், தனது வருங்கால கணவரை ஹன்சிகா அறிமுக படுத்தியுள்ளார். சோஹைல் கதூரியா என்கிற தொழிலதிபரை திருமணம் செய்துகொள்ள உள்ள நிலையில், பல ஆண்டுகளாக காதலித்த இவர்கள் தற்போது ஈபிள் டவர் முன்பு ப்ரீ வெட்டிங் போட்டோஷூட்டை நடத்தியுள்ளனர்.
குறித்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஹன்சிகாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.