பிரபல ஓடிடியில் வெளியாகும் ஹன்சிகாவின் திருமண காணொளி! அவரே வெளியிட்ட தகவல்
நடிகை ஹன்சிகா தனது காதலரை திருமணம் செய்து கொண்ட நிலையில், இவர்களின் திருமண நிகழ்வு காட்சி பிரபல ஓடிடி தளத்தில் வெளியிடுவதாக ஹன்சிகா தெரிவிததுள்ளார்.
நடிகை ஹன்சிகா
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஹன்சிகா, முதலில் குழந்தை நட்சத்திரமாகவே படத்தில் அறிமுகமானார்.
பின்பு முன்னணி நடிகர்களுடன், ஹன்சிகா நடித்து பிரபலமாகிய இவர், சமீபத்தில் தனது காதலரை திருமணம் செய்து கொண்டார்.
ஹன்சிகாவின் குடும்ப நண்பரான மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் சோஹேல் கதூரியாவை திருமணம் செய்துள்ளார். கடந்த 4ம் தேதி ஜெய்ப்பூர் நகரத்தில் 450 வருடம் பழமையான மண்டோடா ஃபோர்ட் அரண்மனையில் நடைபெற்றது.
அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வரும் நிலையில் தற்போது அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், இவர்களின் திருமண விடியோ ‘லவ் ஷாதி டிராமா’ என்கிற பெயரில் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக ஹன்சிகா தெரிவித்துள்ளார்.