வெளிநாட்டில் தோழிகளுடன் குடித்துவிட்டு ஹன்சிகா போட்ட ஆட்டம்! வைரலாகும் காட்சி
நடிகை ஹன்சிகா மோத்வானி இன்னும் ஒரு வாரத்தில் திருமணம் செய்து கொள்ள இருக்கும் நிலையில், வெளிநாட்டில் தோழிகளுடன் பேச்சுலர் பார்ட்டி கொடுத்த காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
நடிகை ஹன்சிகா
கோலிவுட்டில் சினிமாவில் சின்ன குஷ்பு என்று அழைக்கப்படும் நடிகை ஹன்சிகா முன்னணி நடிகையாக வலம் வருகின்றார். இவருக்கும் ஹோஹைல் கதூரியா என்ற தொழிலதிபருக்கும் வரும் டிசம்பர் 4ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது.
ஜெய்பூரில் உள்ள 450 ஆண்டுகால பழமைவாய்ந்த அரண்மனையில் இவர்களது திருமணம் நடைபெற உள்ள நிலையில், ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
திருமணத்திற்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், வெளிநாட்டில் தனது தோழிகளுக்கு பேச்சுலர் பார்ட்டி கொடுத்துள்ளார்.
நடிகை ஹன்சிகாவின் திருமணத்தை ஒளிபரப்பு செய்யும் உரிமையை ஹாட்ஸ்டார் ஓடிடி தளம் 16 கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
கிரீஸ் நாட்டில் பேச்சிலர் பார்ட்டியை தனது தோழிகளுடன் கொண்டாடி இருக்கும் நிலையில், இந்த காட்சியை அவரே வெளியிட்டுள்ளார்.
பேச்சிலர் பார்ட்டியின் போது குடித்துவிட்டு தோழிகளுடன் ஆட்டம் போடுவதையும், கையில் மதுவுடன் கிரீஸ் நகரின் வீதிகளில் வலம் வந்த காணொளி இதோ...