விவாகரத்து முடிவால் கடும் அதிர்ச்சியில் ஹன்சிகாவின் குடும்பத்தினர்
நடிகை ஹன்சிகாவின் சகோதரர் தனது மனைவியை விவாகரத்து செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெய்பூரில் நடிகை ஹன்சிகாவுக்கு மிகப் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், அவர்களது குடும்பத்தில் திருமணம் முடிந்த பத்தே நாட்களில் விவாகரத்து விவகாரம் ஒன்று பூதாகரமாகியுள்ளது.
ஹன்சிகாவின் சகோதரரான பிரசாந்த் மோத்வானி, தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் விவகாரத்து முடிவுக்கு சென்றுள்ளார்.
பிரசாந்த் மோத்வானிக்கும், அவரது மனைவி முஸ்கான் நான்சிக்கும் இடையே அண்மைக்காலமாக சுமூகமான உறவு இல்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில், திருமணமான ஓராண்டுக்குள் தற்போது விவாகரத்து முடிவை எட்டியுள்ளதாக தெரிகிறது.
அதன்படி பிரசாந்த் மோத்வானி விவாகரத்துக் கோரி விண்ணப்பம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரசாந்தின் முடிவால் அவர் குடும்பத்தில் உள்ளவர்கள் மிகவும் வருத்தத்திலும், குழப்பத்திலும் உள்ளனர்.