சஷ்டி விரத ஸ்பெஷல் கடலைப்பருப்பு பாயாசம் ரெசிபி... இப்படி செய்து பாருங்க
Shasti Special Chana Dal Payasam: சஷ்டி விரதத்தின் ஸ்பெஷலாக கடலைப்பருப்பு பாயாசம் எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
தமிழர்களின் முக்கியமான பண்டிகையான சஷ்டி விரதம் இன்று கொண்டாடப்படும் நிலையில், இந்த நாளில் தமிழ் கடவுள் முருகனை வழிபடுவதற்கு விசேஷ உணவுகளை தயாரிப்பதுண்டு.

இந்த விரத நாளில் வழக்கமாக பிரசாதம் செய்யாமல் கொஞ்சம் வித்தியாசமாக ஏதாவது ஒன்றினை செய்ய நீங்கள் விரும்பினால், கடலைப்பருப்பு பாயாசம் செய்து சாப்பிடலாம்.
வழக்கம் போல் சேமியா மற்றும் பால் பாயாசம் என்று சாப்பிடாமல் இதனை செய்து பார்க்கலாம். இந்த கடலைப்பருப்பு பாயாசம் எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
3 ஸ்பூன் கடலைப்பருப்பு
1 கப் துருவிய தேங்காய்
¼ ஸ்பூன் ஏலக்காய் தூள்
10 முந்திரி பருப்புகள்
1 ஸ்பூன் பொடியாக நறுக்கிய தேங்காய் துண்டுகள்
1 ஸ்பூன் நெய்
½ கப் துருவிய வெல்லம்

செய்முறை
தேங்காயை துருவி 1 கப் தண்ணீர் சேர்த்து அரைத்து பால் எடுத்துக்கொள்ளவும். பின்பும் இரண்டு முறை மீண்டும் தேங்காயில் தண்ணீர் சேர்த்து பாலாக எடுத்துக் கொள்ளவும்.
கடலைப்பருப்பை கடாய் ஒன்றில் சேர்த்து எண்ணெய் சேர்க்காமல் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். பின்பு குக்கரில் வேக வைத்து தனியாக எடுத்துக் கொள்ளவும்.
வேக வைத்த கடலைப்பருப்பில் உள்ள தண்ணீரை வடிகட்டி கடலைப்பருப்பினை மிக்ஸியில் சேர்த்து மென்மையாக அரைத்துக் கொள்ளவும்.

அடி கனமான பாத்திரம் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் மசித்த பருப்பு, துருவிய வெல்லம் சேர்த்து 10 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
பின்பு மூன்றாவதாக எடுக்கப்பட்ட தேங்காய்பாலை சேர்த்து நன்றாக கிளறி மீண்டும் 5 நிமிடம் கொதிக்கவிட்டு, பின்பு இரண்டாவது தேங்காய் பாலை சேர்க்கவும்.
நெருப்பினை குறைவான வைத்து சில நிமிடம் கொதித்ததும், இதனுடன் முதலில் எடுத்த தேங்காய் பால் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாக கலந்துவிட்டு அடுப்பினை அணைத்துவிடவும்.
மற்றொரு கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து நெய் சேர்த்து சூடானதும் உடைத்த முந்திரி, நறுக்கி வைத்த தேங்காய் இவற்றினை பொன்னிறமாக வறுத்து, பாசாயத்தில் சேர்த்தால் சுவையான கடலைப்பருப்பு பாயாசம் தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |