உங்க முடி கொத்து கொத்தாக கெட்டுதா? இந்த எண்ணெயை தவறாமல் யூஸ் பண்ணுங்க போதும்
இன்றைய காலத்தில் நிறைய பேர் தலைமுடி தொடர்பான பிரச்சனையால் அவதிப்பட்டுக் கொண்டு வருகிறார்கள்.
தற்போதைய பரபரப்பான உலகில் நமக்கு நமது தலைமுடிக்கு போதுமான பராமரிப்புக்களைக் கொடுக்க நேரமின்றி இருக்கிறோம்.
அதுமட்டுமின்றி இதற்கு மோசமான சுற்றுச்சூழல், உணவுப் பழக்கம் மட்டுமின்றி, தலைமுடிக்கு போதுமான பராமரிப்புக்களை கொடுக்காமல் இருப்பதும் காரணமாக கருதப்படுகின்றது.
இதனால் தலைமுடியின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு, பலவிதமான தலைமுடி தொடர்பான பிரச்சனைகளை சந்திக்கிறோம்.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்க ஒரு சில இயற்கை எண்ணெய்கள் பெரிதும் உதவுகின்றது. அதில் கடுகு எண்ணெயும் ஒன்றாகும்.
கடுகு எண்ணெய்
கடுகு எண்ணெய் தலைமுடிக்கு ஏராளமான நன்மைகளை வழங்குகிறது.
ஏனெனில் இதில் ஒமேகா-3 கொழுப்ப அமிலங்கள், ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் ஈ மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளன.
இச்சத்துக்கள் அனைத்துமே தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதவை.
image -healthline
அந்தவகையில் இந்த எண்ணெயை எப்படி பயன்படுத்துவது என்பதை பார்ப்போம்.
தேவையானவை
- கற்றாழை ஜெல்
- கடுகு எண்ணெய்
- ஷாம்பு
செய்முறை
- ஒரு பௌலில் கற்றாழை ஜெல்லை எடுத்து, அத்துடன் சிறிது கடுகு எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
- பின் அதை தலைமுடி மற்றும் ஸ்கால்ப்பில் படும்படி தடவி, 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
- பின்னர் மைல்டு ஷாம்பு மற்றும் கண்டிஷனர் பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.
- இப்படி வாரம் ஒருமுறை போட்டு வந்தால், தலைமுடி உதிர்வதைத் தடுக்கலாம்.