முடி கருகருவென வளர வேண்டுமா? இந்த கீரையில் சட்னி வைத்து சாப்பிடுங்க
முடி வளர்ச்சிக்கும், சரும ஆரோக்கியத்திற்கும் நன்மையினை கொடுக்கும் கீரை சட்னியை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
கீரை
பொதுவாக கீரைகள் ஆரோக்கியம் நிறைந்த உணவாக காணப்படுகின்றது. அதிலும் அதிசய கீரை என்று அழைக்கப்படும் முருங்கை கீரையில் ஏகப்பட்ட நன்மைகள் காணப்படுகின்றது.
முருங்கையில் கீரை மட்டுமின்றி காயும் பல்வேறு ஊட்டச்சத்தை அளிக்கின்றது. சருமம் மற்றும் கூந்தல் வளர்ச்சி, உடல் வலிமை இவற்றிற்கு அதிசயங்களை நிகழ்த்தக்கூடியதாக இருக்கின்றது.
வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸினேற்றிகளால் நிரம்பியுள்ள கீரையில் சட்னி எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்
முருங்கை கீரை - 1 கப்
துருவிய தேங்காய் - 1/2 கப்
பச்சை மிளகாய் - 4
பெரிய வெங்காயம் -1
துருவிய இஞ்சி - 1 ஸ்பூன்
நறுக்கிய பூண்டு - 1 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
புளி விழுது - 1 ஸ்பூன்
வெல்லம் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் - 1 ஸ்பூன்
தண்ணீர் - 1/4 கப்

செய்முறை
முருங்கைக்கீரையை நன்றாக அலசி நறுக்கி எடுத்துக் கொள்ளவும். பின்பு கடாயினை அடுப்பில் வைத்து எண்ணெய், கடுகு, சீரகம் சேர்க்கவும்.
ஒருசில நொடிகளுக்கு பின்பு நறுக்கிய வெங்காயம், இஞசி, பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இதனுடன் முருங்கை கீரையும் சேர்த்து இரண்டு அல்லது 3 நிமிடம் வதக்க வேண்டும்.
கீரை நன்றாக வதங்கிய பின்பு துருவிய தேங்காய், பச்சை மிளகாய் சேர்த்து கலந்து 2 நிமிடம் வதக்க வேண்டும். பின்பு ஆறிய பின்பு மிக்ஸி ஜாரில் சேர்க்கவும்.
இத்துடன் புளி மற்றும் வெல்லம், உப்பு சேர்த்துக் கொள்ளவும். போதுமான தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்தால் முருங்கை கீரை சட்னி தயார்.
தேவையெனில் இதனை எண்ணெய், கடுகு, வரமிளகாய், கறிவேப்பிலை கொண்டு தாளித்து்க கொள்ளலாம். இந்த சட்னியானது ரத்தத்தை அதிகரிப்பதுடன், பளபளப்பான சருமத்தையும், ஆரோக்கிமான முடியையும் கொடுக்கின்றது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |