கொத்து கொத்தாக தலைமுடி உதிர்கிறதா? இந்த ஒரு நீர் இருந்தா போதும்
தற்போது இருக்கும் தலைமுறையின் பலத்த பிரச்சனைகளில் ஒன்றாக இருப்பது முடி உதிர்வு தான். முடி கொட்டுவது ஒரு சாதாரண விடயதாக இருந்தாலும் இது அதிகதாக கொட்டும் போது ஒவ்வொருவரம் மன உளைச்சலுக்கு ஆளாகுவார்கள்.
தலைமுடி தான் ஒருவரின் அழகை வெளிப்படையாக காட்டும். தற்போது இருக்கும் வாழ்க்கை முறை பழக்க வழக்கங்களால் இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படகின்றது.
இதற்கு வீட்டு வைத்தியம் இருக்க பல கெமிக்கல் பொருட்களின் பெறுபேற்றை அனைவரும் தேடி செல்கின்றனர்.
இது உடல் ஆரோக்கியத்தை கெடுத்து நமது அழகை மங்கச்செய்யும். எனவே இந்த முடி கொட்டும் பிரச்சனைக்கு வீட்டு வைத்தியம் செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
முடி உதிர்வு
வீட்டில் அனைவரும் சாதம் செய்வோம். இந்த சாதத்தை வடிகட்டிய பின்னர் தான் சாப்பிடுவார்கள். இப்படி வடிகட்டும் போது இந்த வடிகட்டிய நீரை வீசக்கூடாது. இதை ஒரு போத்தலில் எடுத்து வைக்க வேண்டும்.
இதை 24 மணிநேரம் நொதிக்க விட வேண்டும். இப்படி நொதிக்க வைக்கப்பட்ட நீரில் தலைமுடியின் வளர்ச்சியைத் தூண்டும் பண்புகள் இன்னும் அதிகமாக இருக்கும்.
இந்த நீரை தலையில் குளிக்க முதல் மசாஜ் செய்து ஒரு மணிநேரம் அப்படியே ஊறவைத்து பின்னர் கழுவ வேண்டும். இதில் உள்ள சத்துக்கள் மயிர்கால்களில் ஊடுருவி வலுவாக்கும்.
சாதம் வடித்த நீரை இப்படி வாரத்திற்கு 1-2 முறை பயன்படுத்தி வந்தால் சிறப்பான பலன் கிடைக்கும். இந்த அளவை விட அதிகமாக பயன்படுத்தினால் முடிக்கு புரதம் அதிகரித்து வறட்ச்சியடையும்.
சாதம் வடித்த நீரில் இனோசிடோல் என்னும் கார்போஹைட்ரேட் உள்ளது. இது தலைமுடியை வலுவாக்கும், முடியின் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தும் மற்றும் முடி உடைதடிலத் தடுக்கும். முக்கியமாக தலைமுடி உதிர்வதை உடனே நிறுத்துகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |