இளநரையால் அதிகம் சங்கடப்படுகிறீர்களா? உங்களுக்காக நச்சுனு நாலு டிப்ஸ் இதோ!
Hair Growth
By Rinosharai
பொதுவாகவே பெண்களுக்கும், ஆண்களுக்கும் முடியை பராமரிப்பது என்பது மிகவும் விருப்பமானதொன்று தான்.
ஆனால் தற்போது மாசுக்கள் நிறைந்த சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களினால் முடி உதிர்வும் நரையும் வந்து அழகையே சிதைத்து விடுகிறது.
நம் முன்னோர்கள் எல்லாம் அப்போது எந்த ஷாம்பும் பயன்படுத்தியது இல்லை, எந்த எண்ணெய்யும் பயன்படுத்தியது இயற்கை பொருட்களைக் கொண்டு இயற்கையாகவே அழகான முடியைக் கொண்டிருந்தார்கள்.
இந்த முடிப்பிரச்சினைகளுக்கு எவ்வித பக்கவிளைவுகளுமின்றி வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சரி செய்யலாம்.
வீட்டு வைத்தியம்
- நன்றாக காய்ந்த நெல்லிக்காய் பொடியும் வெந்தய விதைகளையும் ஒன்றாக சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். தண்ணீர் கொஞ்சம் சேர்த்து பேஸ்ட் போல செய்து இரவு முழுவதும் தலைக்கு தடவி மறுநாள் காலையில் ஷாம்பு போட்டு கழுவினால் இளநரைப் பிரச்சினை தீரும்.
- கருவேப்பிலையை கருப்பு நிறம் வரும் வரை தேங்காய் எண்ணெய்யில் காய்ச்சிக் கொள்ளவும். பின்னர் அதை குளிர விட்டு அந்த எண்ணெய்யை இரவு முழுவதும் தலையில் தேய்த்து மறுநாள் காலையில் தலையை கழுவினால் முடி நரைப்பது குறையும்.
- பாதாம் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு, இரண்டையும் கலந்து உச்சந்தலையில் நன்றாக 30 நிமிடம் மசாஜ் செய்யவும். பின்னர் ஷாம்பு போட்டு கழுவினால் முடி நரைப்பது குறைந்து முடி நன்றாக வளரும்.
-
ஒரு கிளாஸ் தண்ணீரில் 2 தேக்கரண்டி கருப்பு தேயிலை இலைகளுடன் உப்பு சேர்த்து பாதியாக கொதிக்க வைத்து ஆறிய பிறகு முடியில் தடவினால் பளப்பளப்பாகவும் கருமையான முடியாகவும் மாறும்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US