புதிய ஹேர் கட்டில் லாஸ்லியா மிஞ்சிய அழகு! வச்சி செய்யும் நெட்டிசன்கள்
புதிய ஹேர் ஸ்டைட்டில் கலக்கும் ஜனனியின் வீடியோ காட்சி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
முக்கிய போட்டியாளர்
பிக் பாஸ் சீசன் 6 ல் இலங்கை சார்பாக கலந்து கொண்டு பல கோடி ரசிகர்களை சம்பாதித்தவர் தான் ஜனனி.
இவரின் யதார்த்தமான சிரிப்பாலும், குழந்தைத்தனமான செயற்பாடுகளாலும் இந்தியா உட்பட உலகில் இருக்கும் பிக்பாஸ் ரசிகர்களுக்கு சொந்தக்காரி என்றும் கூறலாம்.
இவர் இலங்கையில் யாழ்பாணத்தை சேர்ந்தவர் என்றும் இவருக்கும் தற்போது 22 வயது தான் ஆகிறது என்றும் யாமறிந்த விடயமாகும்.
ஆனால் இந்த சின்ன வயதிலும் நினைத்த காரியங்களை செய்வது துணிச்சலான பெண் தான் ஜனனி.
பிக் பாஸ் வீட்டில் இருந்த வரைக்கும் சக போட்டியாளர்களுக்கும் நல்ல தங்கையாக இருந்து தான் கண்ணீருடன் வெளியேறினார்.

புதியஹேர் கட்டில் கலக்கும் ஜனனி
இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதுடன் ரீல்ஸ், விளம்பரம் என பிஸியாக இருந்து வருகிறார்.
இதனை தொடர்ந்து விஜயின் 67 அதாவது "லியோ" படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறதாகவும் தகவல் வெளியான நிலையில் அந்த செய்தியை கமல் அவர்கள் உறுதி செய்துள்ளார்.
இவரின் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவ்வாக இருக்கும் ஜனனி அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.
அந்த வகையில் தன்னுடைய வீட்டிலிருந்து ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் புதிய ஹேர் கட் செய்திருப்பது நன்றாக இருக்கிறது.
இதனை பார்த்த ரசிகர்கள் லாஸ்லியாவை போல் மாறி கொண்டிருக்கும் ஜனனி என கமண்ட் செய்து வருகிறார்கள்.