தலைமுடியை பளபளப்பாக வைத்திருக்க ஆசையா? அப்போ வீட்டிலேயே தயாரிக்கலாம் மாஸ்க்
ஒருவரின் அழகை அதிகரித்து வெளிக்காட்டுவதில் முடி முக்கிய பங்கு வகிக்கிறது, ஆனால் தற்போது மாசுக்கள் நிறைந்த சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களினால் முடி பொழிவில்லாமல் போய் முடி உதிர்வு, நரைமுடி போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றது.
அந்தவகையில் எவ்வித பக்கவிளைவுகளுமின்றி இயற்கைப் பொருட்களை வைத்து வீட்டிலேயே சில மாஸ்க்குகளை செய்து தலைமுடியை பளபளப்பாக மாற்றிக் கொள்ளலாம்.
தேங்காய் எண்ணெய், கற்றாழை மாஸ்க்
முடி வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெய் மற்றும் கற்றாழை இரண்டுமே முக்கியமானது தான். இவை தலைமுடிக்கு மிகவும் ஊட்டம் அளித்து ஈரப்பதத்தை கொடுக்கும். இவை இரண்டையும் வைத்து தலைமுடிக்கு எவ்வாறு மாஸ்க் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் ஒரு பாத்திரத்தில் இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய்யுடன் இரண்டு தேக்கரண்டி கற்றாழை ஜெல் கலந்து முடியின் வேர்கள் வரைக்கும் மெதுவாக தடவி மசாஜ் செய்து 30 நிமிடத்திற்குப் பிறகு ஷாம்பு போட்டு அலச வேண்டும். இதனை வாரத்துக்கு ஒருமுறை செய்து வந்தால் தலைமுடி பளபளப்பாக மாறும்.
தயிர், தேன் மாஸ்க்
தேங்காய் எண்ணெய் மற்றும் கற்றாழைப் போலவே தேன் மற்றும் தயிரிலும் முடிக்கு ஊட்டம் கொடுக்கும் சக்தி அதிகம் இருக்கிறது. அதுபோலவே இவை இரண்டடையும் வைத்து ஒரு மாஸ்க் செய்யலாம்.
அரை கப் தயிருடன் இரண்டு தேக்கரண்டி தேனை நன்கு கலந்து கை விரல்கள் அல்லது பிரஷ்சை பயன்படுத்தி வேர்கள் முதல் நுனிவரை உச்சந்தலையில் மற்றும் வேர்க்கால்கள் முழுவதும் படுமாறு தடவி 30 நிமிடத்திற்கு பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனை வாரத்திற்கு ஒருமுறை தொடர்ந்து செய்து வந்தால் முடிகள் சேதமில்லாமல் பளபளப்பாக மாறும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |