தலைப்புண் பாதிப்பால் அவதியா?.. இயற்கை முறையில் குணமாக்க எளிய வீட்டு வைத்தியம்!
தலைப்புண் ஆனது நாம் தினமும் பயன்படுத்தும் பொருட்களால், உண்டாக காரணமாகி விடுகிறது. இத்தகைய பொருட்கள் அப்படியே ஒரு படலம் போல் தலையின் தோல் மேல் படர்ந்து விடுவதால் அவை தலைப்புண்களை உண்டாக்கலாம். வேப்ப இலைகள் தோல் மற்றும் சரும ரோகங்களுக்கு சிறந்த நிவாரணி ஆகிறது.
இது தோல் வியாதிகளான எஸிமா, சோரியாசிஸ், புழுக்கள் மற்றும் வார்ட்ஸ் போன்றவற்றிக்கு நல்ல மருந்தாகும். அதே போல் தலைப்புண்களுக்கும் நல்ல தீர்வாகிறது. இதன் ஆன்டிசெப்டிக் மற்றும் ஆன்டிபாயடிக் குணங்கள் இருப்பதால், தலைபுண்களை விரைவாக ஆற்றிவிடும்.
வேப்ப இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அரைத்து விழுதாக்கி, அதை பாதிக்கப்பட்ட இடங்களில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவி விடவும். மேலும், நீருக்கு பதில் நல்ல தேங்காய் எண்ணையையும் பயன்படுத்தலாம்.
இதை தலையில் தடவி மசாஜ் செய்து இரவு முழுவதும் அப்படியே ஊறவைத்து, மறுநாள் காலை ஷாம்பு போட்டு கழுவினால் நல்ல பலன் கிடைக்கும். மருதாணி இயற்கையாகவே தலைமுடியின் ஈரப்பதத்தை பாதுகாக்கவும், தலைப்புண்கள் ஏற்படாமலும் பாதுகாக்க உதவுகிறது.
எந்த தலைமுடி பிரச்சனைக்கும் மருதாணியை அரைத்து விழுதாக்கி தடவுவது மிகச்சிறந்த இயற்கையான தீர்வாகும்.