4 நாட்கள் அடிமை போல் வெச்சிருந்தாங்க.. நீண்ட நாட்களுக்கு பிறகு மனம் விட்டு பேசிய GV பிரகாஷ்
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் மனம் விட்டு பேசிய பேட்டியொன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
ஜி.வி.பிரகாஷ்
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் ஜி.வி.பிரகாஷ்.
இவர், நல்ல திரைப்படங்களை தேர்ந்தெடுத்து அதில் அவரின் முழுமையான திறமையை காட்டி வருகிறார்.
இசையமைப்பாளர் மட்டுமல்லாது சிறந்த நடிகராகவும் ஜி.வி.பிரகாஷ் இருந்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான ஜெயில், செல்பி, ஐயங்காரன், டார்லிங் ஆகிய படங்களில் நல்ல வரவேற்பை பெற்றது.
திருமண வாழ்க்கை
இதனிடையே கடந்த 2013ம் ஆண்டு பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
தற்போது இவர்களுக்கு அழகிய பெண் குழந்தையொன்றும் இருக்கிறது.
திருமணம் முடிந்து 11 ஆண்டுகள் கடந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வாழ்கிறார்.
ஜிவி கூறிய உண்மை
இந்த சமயத்தில் ஜிவி பிரகாஷ் கொடுத்த பழைய பேட்டி தற்போது, இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
அந்தப் பேட்டியில் “ ஆயிரத்தில் ஒருவன் படத்தின் சமயத்தில் ஸ்டுடியோவில் என்னை அடிமையாக வச்சிருந்தாங்க. நான் நாலு நாட்கள் ஸ்டுடியோவில் இருந்தேன். செல்வராகவன் சாரும் வீட்டிற்கு போக மாட்டார்.
தயவு செஞ்சு போங்க நான் வாசித்து வெச்சிருக்கேன் என்று சொல்லுவேன். அப்பவும் அவர் கேட்க மாட்டார்.
அதே போல் தான் மயக்கம் என்ன படத்தின் சமயத்திலும் செய்தார்.” என அவரின் சினிமா பயண அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
You May Like This Video
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |