விவாகரத்திற்கு பின் கணவருடன் இணையும் சைந்தவி.. அவரே வெளியிட்ட காணொளி
விவாகரத்து செய்த பின்னர் மீண்டும் கணவருடன் சைந்தவி இணையவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி
கோலிவுட்டில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருப்பவர் ஜி.வி.பிரகாஷ்.
இவர் இசைமைப்பாளர் மட்டுமல்லாது திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.
GV பிரகாஷ் நடிப்பில் வெளியான டார்லிங், பென்சில் ஆகிய திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்த நிலையில் இவரின் சினிமா வாழ்க்கை அத்தோடு ஆரம்பித்தது.
இதனிடையே, ஜி.வி.பிரகாஷ் சிறுவயதில் இருந்து காதலித்து வந்த பாடகி சைந்தவியை பெற்றோர்கள் சம்பதத்துடன் கடந்த 2013ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது அழகிய பெண் குழந்தையொன்று இருக்கின்றது.
விவாகரத்து பின்னர் இணையும் பிரபலங்கள்
இந்த நிலையில் சமிபத்தில் GV பிரகாஷ்- சைந்தவி இருவரும் தனித்து வாழப்போவதாக சமூக வலைத்தளங்களில் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தனர்.
இந்த செய்தி வெளியானதை தொடர்ந்து கடந்த 11 வருடங்களாக திருமண வாழ்க்கையில் இருந்த இருவருக்கும் என்ன நடந்தது? என சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பு எழுந்தது.
தற்போது அடுத்தடுத்து பிரபலங்களின் விவாகரத்து செய்தி வெளியாகி வருவதால் சைந்தவி- ஜிவி பிரகாஷ் தம்பதிகளின் விடயம் சற்று தனிந்துள்ளது. இப்படி இருக்கும் சமயத்தில், எதிர்வரும் 7ஆம் திகதி மலேசியாவில் நடக்கவிருக்கும் முன்னாள் கணவர்- ஜிவி பிரகாஷ் குமார் இசை நிகழ்ச்சியில் சைந்தவி பாடப்போவதாக காணொளி வெளியிட்டுள்ளார்.
விவாகரத்து பெற்ற பின்னர் இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வரும் காலத்தில் திருமணத்திற்கு பின்னரும் இணைந்து வேலை செய்யும் பிரபலங்களின் பதிவு ரசிகர்களின் கவனத்திற்கு சென்றுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |